உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: பெண்கள் தனியாக நடமாட முடியலியே?

இது உங்கள் இடம்: பெண்கள் தனியாக நடமாட முடியலியே?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என, அக்கட்சி எம்.பி., ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.இதைக் கேட்கவே வருத்தமாக உள்ளது. 'பெண்களுக்கு பணம் மட்டுமே பாதுகாப்பு' என்று, அரசியல் தலைவர்கள் நெஞ்சில், ஸ்டிக்கர் போட்டு ஒட்டி வைத்துள்ளனர் போலும். போதும் இனி, இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்.அரசியல்வாதிகள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்பதற்காக, பாரத நாட்டுப் பெண்கள் எல்லாரும், பிச்சையெடுப்பவர்கள் என்று அர்த்தமல்ல; அந்தக் காலம் மலையேறி விட்டது.இன்று ஆண்களுக்கு சமமாக பெண்களும், போட்டி போட்டு சம்பாதிக்கத் துவங்கி விட்டனர். அதையும் மீறி எங்கள் பெண்களுக்கு, அண்ணன், தம்பி, அப்பா, கணவன் என நிறைய பேர், பக்கபலமாக இருக்கிறோம்.பிரச்னை அதுவல்ல! பட்டப்பகலில் கூட ஒரு பெண்ணால் இன்று, தனியாக வெளியில் நடமாட முடியவில்லை.பாட்டி முதற்கொண்டு, பல் முளைக்காத பச்சிளம் பெண் குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். அரசியல் சட்டமும், வழக்கு - வாய்தா என்று, கைகட்டி அதை வேடிக்கை தான் பார்க்கிறதே தவிர, பெண்களைப் பாதுகாப்பதாய் இல்லை.பெண்களின் வங்கிக் கணக்கே இல்லாவிட்டாலும் பரவாயில்லை... அவர்கள் தைரியமாக, தனியாக வெளியே சென்று, காய்கறி வாங்கி வரும் அளவிற்காவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; அது போதும்!அத்தனை அரசியல் கட்சிகளும், மாங்கு மாங்கு என்று, பணம் தந்து வாயடைப்பதிலேயே உறுதியாக இருக்கின்றனவே தவிர, 'பெண்கள் பாதுகாப்புடன் நடமாட நாங்கள் அரணாக இருப்போம்' என்ற வாக்குறுதி கொடுக்கிறதா... இல்லையே?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Siva Subramaniam
மார் 22, 2024 20:43

Yes women cannot and should NOT walk alone - be with husband or parents Not with endangering spices


பேசும் தமிழன்
மார் 22, 2024 10:22

பப்பு... நீங்கள் ஆட்சி என்ற பெயரில் குப்பை கொட்டிய போது.... காஷ்மீர் பண்டிட் பெண்கள் எத்தனை பேர் மத வெறி கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்கள் என்று தெரியுமா.... ஆனால் இப்போது காஷ்மீரில் பெண்கள் மீது கை வைத்தால்... துப்பாக்கி குண்டு தான் பரிசாக கிடைக்கும் !!!


பேசும் தமிழன்
மார் 22, 2024 10:19

காசா பணமா... சும்மா அடித்து விடு.... இதை நம்ம ஊர் திருட்டு திராவிட மாடல் ஆட்கள் தான் சொல்லி கொடுத்து இருப்பார்கள்.... தேர்தலில் வெற்றி பெற்றால் போதும்... பிறகு அதை நாமும் மறந்து விட வேண்டும்.... மக்களும் கேட்க மாட்டார்கள்.... மறந்து விடுவார்கள்.... இங்கே தமிழ்நாட்டில் நாங்கள் அப்படி தான் மக்களை ஏமாற்றி கொண்டு வருகிறோம் என்று கூறி இருப்பார்கள்.


RAMAKRISHNAN NATESAN
மார் 22, 2024 09:21

யோக்கியமான பிள்ளைகளை பெற்று சமூகத்துக்குத் தருவது எல்லா மதத்து பெற்றோர்களின் கடமை


மணியன்
மார் 22, 2024 08:42

இவன் அப்பன் வீட்டுக்காசா,வரி காட்டுபவர் எல்லோரையும் இளிச்சவாயர்கள் என்று நினைக்கிறான் இவன்.


ராமகிருஷ்ணன்
மார் 22, 2024 07:41

பி ஜே பி யின் பிரச்சார பீரங்கி பப்புஜீக்கு நன்றி. இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி