உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்

கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்

சென்னை : கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022, அக்., 23ல், கார் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அபு ஹனீபா, 33, பவாஸ் ரஹ்மான், 36, சரண், 25 ஆகியோரை தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இதை விசாரித்த நீதிமன்றம், அபு ஹனீபா உள்ளிட்ட மூவருக்கும், ஜன., 2ம் தேதி வரை மூன்று நாட்கள், என்.ஐ.ஏ., காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து, நேற்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை