உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: கர்நாடக சங்கீத வித்வான் டி.எம் கிருஷ்ணாவுக்கு ‛சங்கீத கலாநிதி' விருது வழங்குவதற்கு இசைக்கலைஞர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என உறுதியுடன் அறிவித்து உள்ளனர்.சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. மகசேசே விருது பெற்றவர். இந்திய அளவில் பிரபலமான டி.டி.கே., தொழில் குழும குடும்பத்தை சேர்ந்தவர்.ஒவ்வொரு மாதமும் ஏசுநாதர் மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவேன் எனக் கூறியிருந்தார். கூத்து, பறையாட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்து இருந்தார். அது முதல் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விருதுக்கு தேர்வு

இந்நிலையில், சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும். ‛ சங்கீத கலாநிதி' விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார். இதனால், இந்தாண்டு நடைபெறும் மியூசிக் அகாடமியின் 98வது ஆண்டு கூட்டத்திற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்குவார்.

இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு

இதற்கு கர்நாடக இசைக்கலைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பலரும் இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்து உள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ரஞ்சனி - காயத்ரி

பிரபல இசைக்கலைஞர் இசைக்கலைஞர்களான ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள் வெளியிட்ட அறிக்கையில், ‛‛மியூசிக் அகாடமியின் 2024ம் ஆண்டு கூட்டத்திலும், டிச.,25 ல் நடக்கும் இசை நிகழ்ச்சியிலும் இருந்து விலகிக் கொள்கிறோம். டி.எம்.கிருஷ்ணா தலைமையில் கூட்டம் நடப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசைக்கலைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதுடன், வேண்டுமென்றே இசை சமூகத்தின் உணர்வுகளை மிதித்தவர். மரியாதைக்குரிய ஆளுமைகளான தியாகராஜர் மற்றும் எம்எஸ் சுப்புலட்சுமி ஆகியோரை அவமதித்தவர். கர்நாடக இசைக்கலைஞராக இருப்பது அவமானத்திற்குரியது என்ற உணர்வை பரப்ப முயன்றார். இசையில் ஆன்மிகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.ஈ.வெ.ரா., போன்ற ஒருவரை டி.எம்.கிருஷ்ணா புகழ்ந்ததை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது.ஈ.வெ.ரா., பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என வெளிப்படையாக பிரகடனம் செய்தவர்.இச்சமூகத்தின் ஒவ்வொரு பெண்ணையும் பல முறை கேவலமான மற்றும் தகாத வார்த்தைகளால் பேசியவர்.கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், வேர்கள் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பிற்குரிய அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இதனை புறக்கணித்துவிட்டு, இந்த ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டால், அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது ஆகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

விசாகா ஹரி

விசாகா ஹரி வெளியிட்ட அறிக்கையில்,கடவுள் அருளால், ‛உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முக்கிய மதிப்பீடுகள் மற்றும் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க வேண்டும்'' என்ற கொள்கையை பின்பற்றி வருகிறேன். ஆனால், சமீப காலங்களில் எனது கொள்கைகள் சில செயல்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளதால், இந்த முறை எனது கொள்கையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வானவர், முன்பு நிறைய சர்ச்சைக்கு உள்ளானவர். பலரின் உணர்வுகளை வேண்டுமென்றே பெரிதும் புண்படுத்தி உள்ளார். பல ஆண்டுகளாக மியூசிக் அகாடமியில் வழக்கமான உறுப்பினராக இல்லை. தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி போன்ற நம் இசை மும்மூர்த்திகளும் இசையை முக்கியம் என்ற நம்பியதை போல் நானும் நம்புகிறேன்.மியூசிக் அகாடமியின் இந்த முடிவை, மறைந்த சங்கீத கலாநிதிகளான அரியக்குடி, செம்மங்குடி, பாலக்காடு மணி ஐயர் இன்று உயிருடன் இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? தற்போது இருக்கும் சங்கீத கலாநிதிகள் கூட இந்த முடிவை ஏற்பார்களா? எனக்கூறியுள்ளார்.

திருச்சூர் சகோதரர்கள் ( கிருஷ்ண மோகன் மற்றும் ராம்குமார் மோகன்)

திருச்சூர் சகோதரர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னை மியூசிக் அகாடமியின் 2024ம் ஆண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறுகிறேன். எங்களது நிகழ்ச்சி டிச.,19ல் நடைபெற இருந்தது. நமது நம்பிக்கைகள் மற்றும் முக்கிய மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானவற்றை டி.எம்.கிருஷ்ணா பரப்புகிறார். டிஎம் கிருஷ்ணா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்றால், எங்கள் நம்பிக்கைகள் போலித்தனமானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

துஷ்யந்த் ஸ்ரீதர்

துஷ்யந்த் ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கையில்,வால்மிகி, கம்பன், தேசிகர், தியாகராஜர், தீக்ஷிதர், அருணாச்சல கவிராயர், நம்மாழ்வார் மற்றும் மற்ற ஆச்சார்யார்களின் கண்கள் வழியாக ராமர் மற்றும் சீதையை பெருமையுடன் பார்க்கிறேன். ராமரின் பெருமைகளை உடைத்த ஈ.வெ.ரா.,வின் கண்கள் வழியாக ராமரை வணங்கும் திறன் எனக்கு இல்லை. பின்னர் விருது கிடைக்கும் என அர்த்தப்படுத்தினாலும், உணர்ச்சிகள் இல்லாத ஒரு உயரடுக்கு குழுவின் ஒரு பகுதியாக இருப்பதற்கு பதில், நான் எப்போதும் சிறுபான்மையினராக இருந்து விருது இல்லாதவனாக இறந்துவிடுவேன் எனக்கூறியுள்ளார்.தொடர்ந்து துஷ்யந்த் ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஞ்சனி காயத்ரி ஆகியோருடன் கலந்துரையாடியதில், சனாதனத்தை மதிக்கும் இசைக்கலைஞர்களாக அவர்களை கண்டேன். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்.

சித்ரவீணை ரவிக்கிரண்

சித்ரவீணை ரவிக்கிரண் வெளியிட்ட அறிக்கையில்,மியூசிக் அகாடமி வழங்கிய சங்கீத கலாநிதி விருதை திருப்பித்தர முடிவு செய்துள்ளேன். எதையும் விட கொள்கை முக்கியம் என்பதால், நன்கு பரிசீலனை செய்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். குழந்தைப் பருவத்தில் இருந்து எனக்கு ஆதரவு அளித்த அமைப்பிற்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.எம்.கிருஷ்ணா கிளப்பிய சர்ச்சைகள்

1. தி.க., தலைவர் ஈ.வெ.ரா., கருத்துகளுக்கு ஆதரவாகவும் பிராமணர்களுக்கு எதிராகவும் பேசினார்.2. கோயில்களுக்குள் ஹிந்து அல்லாதோரை தடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.3. கர்நாடக இசை உலகில் பிராமணர்களின் ஆதிக்கத்தை விமர்சித்தார்.4. மசூதிக்குள் கர்நாடக இசைக்கச்சேரியை நடத்தினார்.5. கர்நாடக இசைக்கலைஞர்களை ஜாதி வெறியர்கள் என விமர்சித்தார்6. கர்நாடக இசை உலகம் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என விமர்சித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

sankar
நவ 20, 2024 09:59

மியூசிக் அகாடமியை புறக்கணிப்போம்


Balasubramanian Sundaram
மார் 25, 2024 05:21

It is sad that Brahmins domilnate carnatic music It is still with nadaswaram vidwan who played everyday in over few lakhs temples So they are authorities Brahmins out of love for music protects it Similarly in all mariamman koils only poojaris do pooja not Brahmins For many Brahmins such koils are kuladeivam Stop this rut God bless SBalasubramaian Newyork


Ravi Ganesh
மார் 24, 2024 23:12

எமது தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம் தமது கடுமையான கண்டனத்தை music academy president & committee members உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு தெளிவான கடிதம் மூலம் தெரிவித்துள்ளது


V GOPALAN
மார் 24, 2024 21:18

Dindigul Lioni also sings well though do not know Karnatic music Music Academy can honour him immediately Krishna Lioni winner and runner


Krishna Ramachandran
மார் 24, 2024 10:54

சரி கர்நாடக சங்கீதத்தில் தான் ஜாதி பாகுபாடு இருக்கு சினிமாவில் ஏன் தமிழர்கள் சாதிக்கவில்லை? TMS, PBS, AM Raja, Al Raghavan, Ghantasala, SPB, Yesudas, Mano, Malaysia vasudevan யாருமே தமழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல அதேபோல LR Eswari and Vani Jayaram தவிர மற்ற பிரபல பாடகிகள் தமிழர் அல்ல பிற்காலத்தில் Hariharan, Sankar Mahadevan, Karthik, Srinivas, Tippu, Unni krishnan போன்ற பலர் வந்தனர் ஆனால் அவர்களின் பின்புலம் என்ன என்பதை எல்லாரும் அறிந்ததே


subramanaian iyer
மார் 22, 2024 02:43

I support Smt Vishaka Hari, Sri Dushyant Sridhar, Smt Ranjani-gayathri , Thrichur Bros and Sri Ravi kiran Bravo and kudos to Sri Ravikiran for returning the award in pro TMK is very talented and has potential to lead younger generations to greater heights, but unfortunately egoistic and fallen to wrong ideologies Both himself and Sri Ramasubramaniam will reap sorrow by association with the worthless DK/DMK groups


M R Sampath
மார் 21, 2024 17:23

தமிழகத்தில் சங்கீதம் சங்க காலங்கள் தொட்டு வழி வழியாக கர்ண பரம்பரையாக வந்தது புரந்தரதாசர் மறறும் மும் மூர்த்தி களான ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சாமா சாஸ்திரிகள் காலங்களில் ஒரு இலக்கண வரையரைக்கு உட்படுத்தி மறறும் பிந்தைய காலங்களில் கச்சேரிகள் செய்யும் வழிமுறைகள் பின்பற்றபட்டு தற்போது உள்ள கட்டமைப்பை பெற்றுள்ளது மேலும் எந்த விதமான ரசம் அனாலும் அதை பகவானின்/ஆன்மிக அனுபவமாக பாவித்ததுடன், அதை மெய்மறந்து லயித்து பாடுவதை நோக்கமாக கொண்டது ஆகையால் அத்தகைய ஆன்மீக வாக்யகர்த்தாக்களை மறறும் அவர்களின் படைப்புகளை யும் கொச்சை படுத்தும் வகையில் செயல்பட்ட ஒருவருக்கு கர்நாடக சங்கீதத்தின் சிகரமாக செயல் படும் அமைப்பு, அங்கீகாரம் மறறும் தலைமை தாங்கும் பொறுப்பு தரு மாயின் அந்த அமைப்புடன் தங்களை வேறு படுத்திக் கொள்வது/விமர்சிப்பது அவர்களுடைய கருத்து சுதந்திரம்


Alexander
மார் 21, 2024 17:13

Oppose if he doesnt deserve skill only but do the same for award given by other government


sabari
மார் 21, 2024 17:03

checking validation process


Balasubramanian
மார் 21, 2024 16:38

ஹேமநாதர் பாடலுக்கும் பாணபத்திரர் பாடலுக்கும் உள்ள வித்தியாசம் திருவிளையாடல் திரைப்படம் வந்த நாளில் இருந்து தமிழர் அனைவரும் அறிந்ததே - "இறையருள்"


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி