உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கு:போலீசார் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ்

ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கு:போலீசார் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ்

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை, சைதாப்பேட்டை கோர்ட் தள்ளுபடி செய்தது.ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருபவர். இவர், தன் மீது சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்புவதாக, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் போலீசில் புகார் அளித்தார்.அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னை போலீசார் மனு தாக்கல் செய்தனர்.விசாரித்த நீதிபதி, கஸ்டடி விசாரணைக்கு அனுமதி கோரிய போலீசாரின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் கோரும் மனு மீதான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

W W
ஜன 02, 2025 09:42

பிராம்மண சாபம் நின்று கொள்ளும் அதற்கு ஆயிரம் நிவர்த்திகடன் செய்தாலும் ஒன்றும் ஆக போவதில்லை.Wait & See


Sampath Kumar
டிச 20, 2024 14:19

ஏது அராஜகம் அதிகார திர்மிரில் ஆணவத்தில் ஒருவன் என்ன வேண்டுமானலும் பேசுவான் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதா ?? சொந்த கும்பலையே இந்த ஆளு வம்பில் மாட்டி விட்டு இருக்காரு அப்பறம் மற்றவரை சும்மா விடுவாரா ?/


Bhaskaran
டிச 20, 2024 13:23

உள்ளேவச்சு ஊமையடி கொடுத்தே கொன்னுடுவாங்க


RADHAKRISHNAN
டிச 20, 2024 12:10

கண்டுபிடிக்கமுடியாத வழக்குகள் ஏராளம் உள்ளது அதை கண்டுபிடிக்க துப்பு இல்லை


karthik
டிச 20, 2024 10:55

அராஜக ஆட்சியை இவனுக செய்துகொண்டு .... மோடியை அராஜக ஆட்சி என்று சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்கள் ... திருட்டு கூட்டம்


Tetra
டிச 20, 2024 10:29

அராஜக ஆட்சி. ஒரு உண்மை விளம்பியை பாடு படுத்தும் காவல் துறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை