உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

கோவை; சென்னையைச் சேர்ந்த சங்கர், 'சவுக்கு மீடியா' என்ற 'யு டியூப்' சேனல் நடத்தி வருகிறார். இவர், 'ரெட்பிக்ஸ்' என்ற 'யு டியூப்' சேனலுக்கு பேட்டி அளித்தபோது, பெண் போலீஸ் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தாக புகார் எழுந்தது. கோவை சைபர் கிரைம் போலீசாரால், 2024, மே 4ல் கைது செய்யப்பட்டார். பேட்டி வெளியிட்ட 'யு டியூப்' சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மீது, கோவை ஜே.எம். 4 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜரானார். அடுத்த விசாரணை, 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்து தெரிவித்ததாக, சவுக்கு சங்கர் மீது, பல்வேறு மாவட்டங்களில் பதிவான, 15 வழக்குகளை ஒரே வழக்காக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கும் நேற்று ஜே.எம். 4, கோர்ட்டில் விசரணைக்கு வந்தது. இவ்வழக்குகளில், குற்றச்சாட்டு பதிவுக்காக, நவ. 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
செப் 03, 2025 04:04

தாத்தா மீது தீராத காதல் + திராவிட போதையில் இருக்கும் ஒரு சராசரி பத்திரிகையாளன். இவன் மீதெல்லாம் வழக்குப்போட்டு திராவிட ஈகோ சிஸ்டம் புளகாங்கிதம் அடைவது காலத்தின் கொடுமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை