உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானுக்கு எதிரான வழக்கு: விரைவாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

சீமானுக்கு எதிரான வழக்கு: விரைவாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.இலங்கை கடற்படையினர் தாக்குதலில் இந்திய மீனவர்கள் பலியானதை கண்டித்து சென்னையில் 2010ம் ஆண்டு சீமானின் நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.இவர் மீதான வழக்கு ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2018 ம் ஆண்டு சீமான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் 13 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது. இதனால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.சீமான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், '' சாட்சிகள் விசாரணை துவங்கிவிட்டதால், தாங்கள் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுகிறோம்,'' என்றார்.இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
நவ 29, 2024 06:34

தேசவிரோதம் என்றால் என்ன என்று கேட்பதை விட தேசம் என்றால் என்ன என்று சைமனிடம் கேட்டால் தக்க பதில் கிடைக்கும். அதை வைத்து அவரது கட்சியை தடை செய்யலாமா அல்லது வேண்டாமா என்று யோசிக்கலாம். இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் எவனையும் விட்டு வைக்கக்கூடாது.


Barakat Ali
நவ 28, 2024 22:30

எங்களுக்கு இனி நீயி வேண்டாம் .... விஜய் வந்தாச்சு .... உமக்கு இனிமே கட்டிங் கிடையாது ..... வேணும்னா சூப்பர் ஆக்டர் மாதிரி எங்களோட ஐக்கியம் ஆயிடு என்கிறது குடும்ப கட்சி .... ஆனால் இதுவரை வாங்கிய கை அரிப்பதால் முரண்டு பிடிக்கிறார் .... அதனால் பழைய விவகாரங்கள் தூசு தட்டப்படுகின்றன .... குடும்ப கட்சியுடன் ரொமான்ஸ் இல் இருக்கும் தாமரைக் கட்சியும் ரெண்டு தட்டு தட்ட ஆசைப்படுகிறது .....


தாமரை மலர்கிறது
நவ 28, 2024 19:55

பிஜேபியுடன் ஒத்த கருத்துக்கள் கொண்ட சீமான் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரஜினியை சந்தித்தபிறகு, பிஜேபியுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது. அதனால் அவர் மீதுள்ள வழக்குகளை முடித்துவைப்பது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை