உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வானம் இடிந்துவிடாது; முக்கிய வழக்கில் குட்டு வைத்த ஐகோர்ட்

வானம் இடிந்துவிடாது; முக்கிய வழக்கில் குட்டு வைத்த ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாஜி டி.ஜி.பி., சுனில்குமார் நிமயனத்தை எதிர்த்த வழக்கில், அவசர வழக்காக எடுக்காவிட்டால் வானம் இடிந்து விழாது என்று சென்னை ஐகோர்ட் விமர்சித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாஜி டி.ஜி.பி., சுனில்குமார் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நியமனத்தை எதிர்த்து அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த ஐகோர்ட், மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுனில்குமார் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டது. அடுத்த விசாரணை நவம்பர் 11ம் தேதி நடக்கும் என்று கூறியது.இந் நிலையில் இந்த வழக்கு, இன்று அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்படவில்லை. இது குறித்து மனுதாரர் தரப்பில் நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா என்று வினவிய கோர்ட், வழக்கை பட்டிலிடுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்றது.அதேநேரத்தில் வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதை ஏற்காத கோர்ட், அரசின் கொள்கை முடிவில் எப்படி தலையிட முடியும் என்று கேள்வி எழுப்பியது.பின்னர், வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழாது என்று கடுமையாக விமர்சித்தது. எல்லா நியமனங்களுக்கும் அரசியல்சாயம் பூசவேண்டாம் என்றும் கண்டித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kantharvan
நவ 11, 2024 21:59

அரசின் கைப்பாவை ...


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:43

வழக்கு முடிந்து அப்பீல் செய்யப்படும் தொழிளாளர்கள் write petitions மனுக்களே High court ல் 15 வருஷங்களுக்கு மேல் இழுத்துக்கொண்டிருக்கின்றன.


Iniyan
நவ 11, 2024 20:53

நீதி மன்றங்கள் தி மு க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கை பாவைகள்


அப்பாவி
நவ 11, 2024 19:55

என்ன அவசரம். இடிந்து விழுவதற்கு வானம் ஒண்ணும் அங்கண்வாடி கட்டடம் இல்லை. 2047 க்குள்ளாற விசாரிச்சு நல்ல தீர்ப்பா சொல்லுங்க.


Ramesh Sargam
நவ 11, 2024 19:45

Caged Parrot அதாவது கூண்டுக்கிளி என்று சொல்வார்கள். அதுபோல இருக்கிறது நீதிமன்றங்களின் செயல்பாடுகள்.


Ganapathy Subramanian
நவ 11, 2024 17:33

கோர்ட் செய்தது, சொன்னது என்று சொல்வதைவிட எந்த நீதிபதி சொன்னார் என்பதை சொன்னால் நமக்கும் ஒரு ஐடியா கிடைக்கும் யார் எந்த கட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று............ கழகங்கள்தான் இவர்களுக்கு பிச்சையிட்டது என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். அதனை சரியென்று சொல்லும்விதமாக சில நீதியரசர்கள் நடப்பது அவர்களுடைய கட்சி ஆதரவு நிலைப்பாட்டினை நமக்கும் விளக்குமே?


karutthu kandhasamy
நவ 11, 2024 17:49

What Ganapathi subramanian said is 100% correct.


raja
நவ 11, 2024 20:18

ஒருவேளை கட்டுமரத்தை புதைக்க இரவில் வழக்கு நடத்தி தீர்ப்பு சொண்ணவரோ...


இசக்கிமுத்து,தூத்துக்குடி
நவ 11, 2024 17:02

திமுகவின் திராவிடமாடல் அரசுக்கு ஜால்ரா அடிக்க RSB மீடியாக்களில் ஆட்கள் இருப்பது போல அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.


சாண்டில்யன்
நவ 11, 2024 17:57

எல்லாம் விஸ்வகுருவின் புண்ணியம்தான்


Sathyanarayanan Sathyasekaren
நவ 11, 2024 20:18

சாண்டில்யன் வெட்கமாக இல்லையா? ஊழல் செய்யும் தருதலைகளுக்கு ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை