உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 

வரதட்சணை கொடுமை 3 பேர் மீது வழக்கு 

கடலுார், : மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ் மனைவி ரஞ்சிதா, 28; இவர்களுக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, ரஞ்சிதா பெற்றோர் சீர்வரிசையாக 10 சவரன் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுத்தனர்.திருமண கடனை அடைக்க 2 லட்சம் ரூபாய் வாங்கி வரும்படி, ரஞ்சிதாவை கணவர் மைக்கேல்ராஜ், இவரது அக்கா நித்திஷா, மாமா சந்தோஷ்குமார் ஆகியோர் கொடுமைப்படுத்தி மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மைக்கேல்ராஜ் உட்பட 3 பேர் மீது கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை