உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாமனார் மீது பொய்யாக போக்சோ புகார் அளித்த மருமகள் மீது வழக்கு

மாமனார் மீது பொய்யாக போக்சோ புகார் அளித்த மருமகள் மீது வழக்கு

சென்னை: தன் குழந்தையை மாமனார் பாலியல் வன்கொடுமை செய்தததாக பொய் புகார் அளித்த மருமகள் மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில், இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரில், 'தன் குழந்தையை, மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறப்பிட்டிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளம்பெண்ணின் கணவர் எம்.இ., படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதை, அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால், தந்தையை பழிவாங்க நினைத்த மகன், மனைவி வழியாக பாலியல் வன்கொடுமை என, பொய் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.இதையடுத்து, உண்மைக்கு புறம்பாக புகார் அளித்த இளம்பெண் மீது, போலீசார் வழக்கு பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி, பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு - 22 (1)ன் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தமிழன்
ஆக 14, 2025 11:58

அடே அப்பா பரவாயில்ல பொது அறிவ பயன் படுத்துறாங்க


ஜனகர்
ஆக 14, 2025 11:41

மாதா , பிதா , குரு , தெய்வம் இவர்கள் மீது வீண் பழி சுமத்துவது சமுக்கத்திருந்து ஒதுக்கி வைக்க வேண்டியவர்கள். பாவம் அந்த பெண் குழந்தை கீழ்த்தரமானவர்களுக்கு பிறந்திருக்க கூடாது.


lana
ஆக 14, 2025 11:27

இது தான் கலி காலம் மட்டும் அல்ல காலி களின் காலம்


VSMani
ஆக 14, 2025 10:45

இவனையெல்லாம் பெற்று, வளர்த்து, எம்.இ., படிக்கவைத்து திருமணம் செய்துவைத்து அழகு பார்த்த தந்தைக்கு இவன் ஆற்றிய செயல் பாராட்டத்தக்கது. சிறந்த மகன் மருமகள் விருதுகள் இவர்கள் இருவருக்கும் கொடுக்கலாம்.


சந்திரசேகர்
ஆக 14, 2025 10:22

வணங்கான் படம் இப்பதான் பார்த்து இருப்பார்கள் போலிருக்கிறது .


mahalingamssva
ஆக 14, 2025 08:03

ஆண்டவா, மக்களுக்கு மூளை ஏன் இப்படி வேலை செய்யுது


Suresh Gurusamy
ஆக 14, 2025 07:30

மகளுக்கு தன் அப்பா தொல்லை கொடுத்ததாக மனைவியை அனுப்பியவன், மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறி இருந்தால் கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கும். ஈனபிறவிக்கு பயிற்சி போதாது.


சண்முகம்
ஆக 14, 2025 05:53

தன் மகளுக்கு தன் அப்பா தொல்லை கொடுத்ததாக மனைவியை அனுப்பியவன் ஒரு னப்பிறவி.


நிக்கோல்தாம்சன்
ஆக 14, 2025 04:51

என்ன பொறப்பும்மா நீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை