உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழா; ஜாதி டி-ஷர்ட், கொடிக்கு தடை விதிக்க வழக்கு

நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழா; ஜாதி டி-ஷர்ட், கொடிக்கு தடை விதிக்க வழக்கு

மதுரை : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழாவில், ஜாதி ரீதியான டி-ஷர்ட் அணிய, கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில்,'அறநிலையத் துறை அதிகாரிகள் போலீசாருடன் ஒருங்கிணைந்து, விதிகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் விழா நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாதவன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேரோட்ட திருவிழா ஜூலை 8ல் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இத்திருவிழாவில் சிலர் ஜாதி ரீதியான டீ-ஷர்ட் அணிந்து, ரிப்பன்களை கையில் வைத்துக் கொள்கின்றனர். ஜாதி கொடியை பயன்படுத்துகின்றனர். ஜாதி ரீதியான வண்ணங்களைக் கொண்ட பட்டாசுகளை வெடிக்கச் செய்கின்றனர். இதனால் மோதல் ஏற்படுகிறது. பக்தர்கள் மன உளைச்சல் அடைகின்றனர். தேரோட்ட திருவிழாவில் ஜாதி ரீதியான டீ-ஷர்ட் அணிய, கொடியை பயன்படுத்த, பட்டாசு வெடிக்க தடை விதிக்க வலியுறுத்தி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அறநிலையத் துறை அதிகாரிகள் போலீசாருடன் ஒருங்கிணைந்து, விதிகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி திருவிழாவை அமைதியான முறையில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Nagarajan Thamotharan
ஜூன் 29, 2025 10:56

இந்து அறநிலைய துறை பெயரில் அந்நிய மத போலி பக்தர்கள் நெல்லையப்பர் கோயில் தேரோட்ட உற்சவத்தில் தலையீடு செய்வது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் இந்து மத நம்பிக்கை எதிரான மனப்பான்மையுடன் அவர்கள் மூலம் ஏற்படுத்தபடும் கடவுள் மறுப்பு கொள்கை முறையில் காவல் துறை கண்டிப்புடன் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்க படுகிறது.


உ.பி
ஜூன் 28, 2025 14:53

ஜாதி சர்டிஃபிகேட் அரசாங்கம் தானே குடுத்தாங்க???


Nandakumar
ஜூன் 28, 2025 13:38

அவர்களை அங்கேயே சுட்டு தள்ளுங்கள்.


நாஞ்சில் நாடோடி
ஜூன் 28, 2025 12:45

ஈ வே ரா ஜாதியயை ஒழித்த லட்ச்சணம். திராவிட கும்பல் இருக்கும் வரை ஜாதிய மோதல்கள் இருக்கும். ஜாதிய பிரச்சனைகள் தீர்ந்து விட்டால் திராவிட கும்பலுக்கு வயிறு வளர்க்க முடியாது. எனவே ஜாதி பிரச்னை மொழி பிரச்னை இவற்றை தூண்டி விட்டு அரசியல் செய்கிறது திராவிட கும்பல் ...


M S RAGHUNATHAN
ஜூன் 28, 2025 12:14

ஒரு தாடிக் காரன் ஊர் ஊராய் போய் ஜாதியையும் , மூட நம்பிக்கையும் ஒழித்துவிட்டார் என்று மஞ்சள் துண்டு போட்ட ஒரு பகுத்தறிவு பகலவன் சொன்னதாக ஒரு கழலகம் சொல்லிக் கொண்டு இருக்கிறதே, அது பொய்யா கோபால். அப்படி என்றால் ஏன் இன்னமும் திரௌபதி அம்மன் கோயில், காந்தாரி அம்மன் கோயில்கள் பிரச்சினைகள் முடிவிற்கு வரவில்லை. ராஜாஜி, தேவர் அய்யா ஆகியோருக்கு இருந்த துணிவு அனைத்து பிரிவினரும் கோயில்களுக்கு சென்று வழிபடலாம் என்று சட்டம் கொண்டுவந்து நிகழ்த்தி காட்ட முடிந்தது. ஆனால் இப்போது இருக்கும் அரசிற்கு அந்த திராணி, துணிவு இல்லை. காரணம் ஜாதிப் பற்று.


M S RAGHUNATHAN
ஜூன் 28, 2025 11:41

யார் இந்த பொது நலன் வழக்கு தொடுத்தது. இம்மாதிரி வழக்குகளை விசாரித்து பைசல் செய்யும்போது கவனம் தேவை. நாளை இவர் போன்ற வேறு ஒரு மனுதாரர், பக்தர்கள் ஜாதி அடையாளங்கள் ஆன பூணூல், திருநீறு பூசிக் கொண்டு வருதல், திருமண் அணிந்து கொண்டு வருவது, பெண்கள் பொட்டு, மற்றும் பூ வைத்துக்கொண்டுவருவது இவை மத அடையாளங்கள் என்பார்கள் தடை செய்யப் படவேண்டும் என்று வருவார்கள். இந்த தடை கேட்டு மனு போட்ட மனுதாரர் மேல் ஏன் அபராதம் விதிக்கப்படவில்லை ?


V Venkatachalam
ஜூன் 28, 2025 13:20

வழக்கு தொடுத்தவர் மீது ஏன் அபராதம் விதிக்கவேண்டும்? அவர் சரியாகத்தானே கேட்கிறார். ஜாதி அடையாளங்களை கோவில் விழாவில் காண்பித்து அதை வைத்து இந்த க உ பீஸ் கலவரத்தை தூண்டுவானுங்க. திருவிழாவுக்கு ஜாதி ட்ரஸ் போட்டு கொண்டு வரணும் அப்புடீங்கிறதே க.உ.பீஸ் ஏற்பாடு தானே. வீட்டில் டெய்லி ஜாதி டிரஸ் அணிந்து கொண்டு தான் தன்னோட தினசரி வேலைகளை கவனிக்கிறான்களா? அதைபற்றி கோர்ட் தடை போட்டதற்கு பாராட்டுகள்


SENTHIL NATHAN
ஜூன் 28, 2025 09:48

கோட்டார் மாற்று மதத்தினர் இந்து மதம் சம்ராதயங்கள் மீது வளக்கு போடுவதை தடுக்க வேண்டும்


sridhar
ஜூன் 28, 2025 08:50

ஜாதி இன்னும் இருக்குதா ஏதோ ஒரு old man ஐம்பது வருஷம் முன்னாடியே ஜாதியை ஒழிச்சிகிட்டானாமே .


ramesh
ஜூன் 28, 2025 13:36

அந்த old man தான் இறந்தும் 52 வருடங்கள் ஆகியும் இரவில் கனவில் வந்து இப்படி உங்களை புலம்ப விட்டு கொண்டு இருக்கிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை