வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜெயா என்கின்ற சிங்க பெண்மணி ஆட்சி செய்து கொண்டிருந்த போது இந்த குஜய் / கமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்கள்.
திருச்சி : த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் உட்பட ஆறு பேர் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்டசபை தேர்தலுக்காக மக்கள் சந்திப்பு பிரசாரத்தை, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், வரும் 13ம் தேதி திருச்சியில் துவங்க திட்டமிட்டுள்ளார். இதற்கு போலீஸ் அனுமதி பெறுவதற்காக கடந்த 6ம் தேதி, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மனு அளித்தார். அப்போது, கமிஷனர் அலுவலகம் எதிரே கூடிய கட்சியினரை கலைக்க முயன்றபோது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், அனு மதியின்றி கூட்டமாக கூடுதல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் உள்ளிட்ட ஆறு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.
ஜெயா என்கின்ற சிங்க பெண்மணி ஆட்சி செய்து கொண்டிருந்த போது இந்த குஜய் / கமல் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார்கள்.