உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரி வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரி வழக்கு

மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடைவரைக் கோயிலாகும். அறுபடை வீடுகளில் முதன்மையானது. மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில், தீபத்துாண், தல விருட்சமான கல்லத்தி மரம் அமைந்துள்ளது.திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குகைக்கோயில், மலையின் வடமேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள், குகை உள்ளன.திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மலையை சிக்கந்தர் மலை; மலை முழுவதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது; மலை மீது ஆடு, கோழிகளை பலி கொடுப்போம்' எனக்கூறி ஆடுகளோடு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தங்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுகிறது என தவறான பிரசாரத்தை அடிப்படைவாத அமைப்புகள் செய்து வருகின்றன. இது ஹிந்துக்களிடையே கொந்தளிப்பு, வேதனையை ஏற்படுத்திஉள்ளது.மலை மீது ஆடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். சிக்கந்தர் தர்கா, அதன் கீழே உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலை அரசே ஏற்று நடத்த வேண்டும். மத மோதலை துாண்டும் வகையில் செயல்படும் சில மத அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோயில் துணை கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: இதுபோல் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து பிப்.,4 ல் விசாரணைக்கு இவ்வழக்கை பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை