உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தடை கோரிய வழக்கு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை:'திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும்' என தாக்கலான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோவில் மலையாள தாந்திரீகம் ஆகமத்தை பின்பற்றக்கூடியது. கேரளா முட்டவிளை மடம் தந்திரி சுப்பிரமணியரு தான் தலைமை ஆன்மிக குரு. கும்பாபிஷேகத்திற்கு புனரமைப்பு பணி மேற்கொள்ள அறநிலையத்துறை அமைத்த குழுவில் சைவம், வைணவ ஆகம நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள், மலையாள தாந்திரீக ஆகமத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்ல. அந்த ஆகம நிபுணர்கள் குழுவில் இடம்பெறவில்லை. கேரள சம்பிரதாய ஆகம நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். இல்லையெனில் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மாநில அளவில் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அனுமதியுடன் திருச்செந்துார் கோவிலில் புனரமைப்பு பணி நடக்கிறது. பெரும் பகுதி பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஏற்கனவே நிபுணர் குழு அமைத்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இவ்வழக்கில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை.பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் அறநிலையத்துறையை அணுகி நிவாரணம் தேடலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுசீராய்வு மனு நிலுவை

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற உத்தரவிடக் கோரி ஏற்கனவே ஒரு வழக்கு தாக்கலாகி இருந்தது.அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தி உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு, கும்பாபிஷேகம் நடத்த எந்த நேரம் உகந்தது என்பது குறித்து விவாதிக்க வேண்டும். அந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என உத்தரவிட்டது. அதை மறு சீராய்வு செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Krishna Kumar
ஜூன் 19, 2025 14:12

பத்திரிக்கைகள் தொடங்கிய காலத்தில் இருந்து திராவிட ஆட்சிகள் நடைபெறத் தொடங்கியது வரையிலான காலத்தில், இந்த பத்திரிக்கைகள் தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நியாய தர்மத்தின் படி செயல்பட்டு மக்களின் நலனுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் கலாச்சார நலனுக்காகவும் பாதுகாத்து வந்தது. என்றைக்கு இந்த பத்திரிக்கைகள் ஊடகங்கள் என்ற பெயரிடப்பட்டு வியாபாரமயமாக ஆக்கப்படடதோ அவை பெரும்பாலும் ஆட்சியாளர்கள் சாதகமாகத் தான் ஆகிவிட்டது


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:58

பந்தளம் அரசர் பரம்பரை கூட தமிழ்ப் பரம்பரை என்றும் கூறுவர். அதற்காக சபரிமலை ஆலயத்தை தமிழக ஆகமப்படி நடத்த ஒப்புக் கொள்வார்களா?


vbs manian
ஜூன் 19, 2025 09:36

கோர்ட்டும் அரசும் கோவிலுக்குள் வந்துவிட்டன. கடவுள் வெளியேறிவிட்டார். வெறும் உயிரில்லா சடங்குகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.


vbs manian
ஜூன் 19, 2025 09:33

வெகு விரைவில் கோவில்கள் அரசு இயந்திரங்களாக மாறிவிடும். மக்களின் பக்தி உணர்வு கலாச்சார ஈடுபாடு காணாமல் போகும். எல்லாவற்றுக்கும் அரசு ஆணை போட்டு இயந்திர மயமாக்கி விடுவார்கள். கோவில் காட்சி பொருளாகும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 09:18

ஹிந்து சமய விதிகளை வைத்து ஆட்சியாளர்கள் மற்றும் கோர்ட்டுகளால் ஹிந்துக்கள் கொத்துக்கறி போடப்படுகிறார்கள் .... ஆனால் அதை உணரக்கூட வழியின்றி அதே மக்கள் அதே ஆட்சியாளர்களிடம் விலைபோகிறார்கள் ....


sridhar
ஜூன் 19, 2025 07:34

எல்லாத்துக்கும் ஒரு அரசு சார்பான வல்லுநர் குழு, நிபுணர் குழு ஆகம விஷயங்களில் தலையீடு . இது எங்க போய் முடியுமோ . ஆண்டவா


Kasimani Baskaran
ஜூன் 19, 2025 03:54

கோவில் நிர்வாகத்தில் அறநிலையத்துறைக்கு துளி கூட அதிகாரம் கிடையாது. இருந்தும் அனுமதிப்பது முருகனையே அவமதிப்பது போல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை