உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் ரத்து

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் ரத்து

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஆறு வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கரூரில், 2021, 2022ல், அ.தி.மு.க., ஆண்டு விழா, பால் மின் கட்டண உயர்வை கண்டித்து நடத்திய போராட்டம்; அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஆகியவற்றால், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, வி.ஏ.ஓ., புகார் அளித்தார். இது தொடர்பான வழக்குகளின் விசாரணை, கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நீதிமன்றங்களில்உள்ள ஆறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ