உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து

சென்னை: தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.கடந்த 2018ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S.L.Narasimman
மார் 17, 2025 20:03

விடியல் அமைச்சர்களெல்லாம் பத்தரை மாற்று தங்கஙகள் என்று மீண்டும் கனம் கோர்ட்டாரால் நிருபிக்கபட்டுள்ளது


R.Balasubramanian
மார் 17, 2025 18:08

மாசா மாசம் நீதிபதிகள் தமிழக அரசால் கவனிக்க பட்டால் தீர்ப்பு இப்படி தான் வரும்


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 17, 2025 17:40

அதெப்படி சார், திமுக அமைச்சர்கள் மீதான அத்தனை வழக்குகளும் தள்ளுபடி ஆகின்றன? அவ்வளவு நேர்மையானவர்களா? அப்படி என்றால் ஆளுக்கொரு பாரத ரத்னா பார்சல்


Dharmavaan
மார் 17, 2025 17:39

திமுக மந்திரிகள் என்றால் தனி சலுகை நீதி மன்றத்தில்..அது பிறர்க்கு இல்லை


Oru Indiyan
மார் 17, 2025 17:35

என்ன காரணம். நீதி மன்றத்தில் கிடைப்பது


கடல் நண்டு
மார் 17, 2025 16:56

எதுர்பார்த்த தீர்ப்பு தான் ..உபி நாட்டாமைக்கு 200 எக்ஸ்ட்ரா பார்சல் .. இது போல எல்லா கேசுக்கும். நல்லா முட்டு கொடுக்கோணும் ..


sankar
மார் 17, 2025 16:43

இதெல்லாம் சில்லறை வழக்குகள், சில சில்வண்டுகள் மீது - திமிங்கலங்கள் மாட்டப்போகுது பாருங்கள்


புதிய வீடியோ