வழக்குகள் குறித்து விசாரணை கூடாது!
'தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி மட்டுமே, தேர்தல் கமிஷன் தொடர்ந்து விசாரணையை நடத்த முடியும்' என, தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.தீர்ப்பு விபரம்:ஒரு அரசியல் கட்சியில், இரு வேறு குழுக்கள் இருந்தால், எந்த குழு உண்மையான கட்சி என்பது குறித்து விசாரணை நடத்த, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் குழுக்கள் உள்ளன என்பதற்கும், அந்த குழுக்கள் தாங்கள் தான் உண்மையான கட்சி என்று கோருவதற்குரிய தகவல்கள் குறித்தும், தேர்தல் கமிஷன் முதலில் திருப்தியடைய வேண்டும்.அவ்வாறு திருப்தியடைந்தால் மட்டுமே, அது விசாரணையை துவக்க முடியும். இல்லையெனில், விசாரணைக்கு தேவை எழாது. அதேநேரத்தில், அ.தி.மு.க., விவகாரத்தை பொறுத்தவரை, விசாரணை நடத்த, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. சிவில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக, தேர்தல் கமிஷன் இதில் உத்தரவு பிறப்பிக்கக் கூடும் என்ற மனுதாரர் தரப்பு அச்சம் நியாயமற்றது.எனவே, தேர்தல் கமிஷனின் விசாரணை என்பது, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி மட்டுமே நடத்தப்பட வேண்டும். சிவில் நீதிமன்ற விசாரணையில் உள்ள விவகாரங்கள் குறித்து, எந்த விசாரணையும் நடத்தக் கூடாது.- உயர் நீதிமன்ற நீதிபதிகள்