உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் கெடு

ஜாதி பெயர்களை 4 வாரத்தில் நீக்கணும்; கல்வி நிறுவனங்களுக்கு ஐகோர்ட் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் செயல்பட்டு சில கல்வி நிறுவனங்களின் பெயரில் ஜாதிப் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அந்த கல்வி நிறுவனம் வேன், கல்வி வளாகத்தில் இருக்கும் பெயர் பலகை உள்ளிட்டவையில் ஜாதி பெயருடன் கல்வி நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும்.இந்நிலையில், ''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போது பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:* ஜாதி பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.* ஜாதி பெயர்களைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண்டும்.* கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென்றால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.* அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் பெயர்களை, அரசுப்பள்ளி என மாற்ற வேண்டும்.* பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது. இவ்வாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

பல்லவி
ஏப் 17, 2025 19:25

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு பாதிக்கப்படும் நிலையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது மக்கள் ஜனநாயக நன்மைக்கே


Narasimhan Krishnan
ஏப் 17, 2025 15:04

நீதிபதிகள் தங்களை மனிதர்களாக நினைத்து கொள்வதில்லை என்பதையும் ஒரு சாதாரண சட்டம் ஒழுங்குக்கு கட்டப்படும் ஒழுக்கமுள்ள ஏழை குடிமக்கள் எவரும் நீதிபதிபாலன அமைப்பின் மூலம் மட்டுமே தங்களுடைய வழக்குகளை பிணக்குகளை தீர்த்துக் கொள்ள பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதை நீதிபதிகள் உணர்வதே இல்லை. அதனால் தான் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பும் அந்த நீதியரசர் என்கிற பட்டத்தை விரும்புகிறார்கள்.


VEERAAKKUMAR T N
ஏப் 17, 2025 14:01

சாதியை ஒழிக்க துடிக்கும் நீதி அரசர்களும் அரசியல் வாதிகளும் மக்களின் பொருளாதார ஏற்ற தாழ்வை ஒழிக்க முன் வராததுக்கு ஏன்?? அடுத்த வேளை உணவுக்கு உழைப்பவனிடம் இருந்து வியாபாரம், முதலீடு, என்று பல காரணங்கள் கூறி 10, 100 ஆம் தலைமுறைக்கு சொத்து சேர்க்க அனுமதிப்பது ஏன்?? கடின, உயிரை பணயம் வைக்கும் 80 வயதினர் உழைப்புக்கு குறைந்த கூலி படிப்பு வேலை, முதலீடு குறைந்த உழைப்பு குறைந்த வயது அதிக கூலி??? இதுதான் நீதி சாதியை ஒழித்து மாறி மாறி திருமணம் செய்தால் பசி ஒழியுமா? வறுமை ஒழியுமா


Ajay Prakash
ஏப் 17, 2025 12:35

கல்வி நிறுவனங்களின் பெயரில் இருக்கும் ஜாதியின் பெயரை நீக்க உத்திரவிடும் நீதிமன்ற நீதியரசர்களை ஒரு சாராசரி இந்திய குடிமகனின் கேள்வி? கல்வி, வேலை மற்றும் பிற சலுகைகள் ஜாதிப் பெயரில் வழங்கப்படுவதை விட தகுதிகள் அடிப்படையில் வழங்க உத்திரவிட்டால் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே ஐயா.


Ajay Prakash
ஏப் 17, 2025 12:17

கல்வி நிருவணங்களின் பெயரில் உள்ள சாதியின் பெயரை நீக்கச் சொல்லும் நீதியரசர்களை தலை வணங்குகிறேன். அதே போல் கல்வி , வேலைவாய்ப்பு, மற்றும் பிற சலுகைகள் ஜாதிப் பெயரில் வழங்கப்டுவதையும் நீக்கினால் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம்..


S.V.Srinivasan
ஏப் 17, 2025 10:55

வர வர நீதி மன்றங்களின் செயல்பாடுகள் சர்வாதிகார தனமா இருக்கு. போற போக்கை பார்த்தால், மத்திய அரசு, மாநில அரசுகளை கலைத்துவிட்டு ஆட்சியை இவர்கள் கையில் எடுத்துக்கொண்டு விடுவார்கள் போலிருக்கு.


பல்லவி
ஏப் 17, 2025 07:47

அந்த கொடி கம்பங்கள் நீக்கம் மீதான உத்தரவு ஞாபகம் வந்தது


Srinivasamoorthi
ஏப் 16, 2025 22:25

சாதி நலனுக்காக உருவாக்கப்படும் சங்கங்களை வேறு என்ன பெயரில் பதிவு செய்ய முடியும்? மேலும் இதேபோல, இஸ்லாமிய, கிறிஸ்தவ கல்வி நிறுவன பெயர்களை மாற்ற உத்தரவு போடுவார்களா?


Subash BV
ஏப் 16, 2025 22:12

Nothing will happen.


mohanamurugan
ஏப் 16, 2025 21:11

இனி இந்தியர் அனைவரும் ஒரே சாதியாய் வாழ முடிவெடுப்போம். ஆ. ராஜாவும் , ஹ. ராஜாவும் , துப்புரவு பணி செய்பவரும், சாமி சிலைகளை தொட்டு பூஜை செய்பவரும் ஒரே சாதி என்றும் எந்த ஆணும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் உறுதி ஏற்போர் ஆம் என்க.


முக்கிய வீடியோ