உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு; தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: சொல்கிறார் முதல்வர்

ஜாதிவாரி கணக்கெடுப்பு; தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி: சொல்கிறார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தி.மு.க.,வுக்கும், 'இண்டியா' கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாமதம் செய்யவும், மறுக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்த மத்திய அரசு, கடைசியாக இப்போது ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்து உள்ளது. ஆனால், எப்போது இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும், எப்போது கணக்கெடுப்பு நிறைவடையும் என்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை. பீஹார் தேர்தலில் சமூக நீதி பிரச்னை முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில் அரசியல் காரணத்திற்காக இதை அறிவித்து உள்ளனர். முன்பு, ஜாதி அடிப்படையில் மக்களை பிரிப்பதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டி, இழிவுபடுத்திய இதே பிரதமர், இப்போது அதே கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது கொள்கை முடிவு எடுக்கவும், மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ளவும், சமூக நீதி அளிக்கவும் மிகவும் அவசியமானது. பாதிப்பு எந்தளவு என்பதை அறியாமல், அநீதிகளுக்கு நிவாரணம் அளிக்க முடியாது.தமிழக அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இது ஒரு மிகச்சிறப்பான வெற்றியாகும். சட்டசபையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி முதன்முதலாக நிறைவேற்றியது நாம் தான். ஒவ்வொரு மன்றத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினோம்.ஒவ்வொரு முறை பிரதமரை சந்திக்கும்போதும், கடிதம் எழுதும் போதும் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மற்ற அனைவரும் மாநில அளவிலான ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்திய நிலையில், கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று நாம் உறுதியாக இருந்தோம். சட்டப்பூர்வமான ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும். இப்போது, நமது நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது திமுக மற்றும் இண்டியா கூட்டணிக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Anu Sekhar
மே 06, 2025 21:30

கொஞ்சமும் வெட்கம் இல்லாத ஜென்மங்கள்.


S.V.Srinivasan
மே 01, 2025 16:37

ஸ்டிக்கர் திலகம் சின்னசாமி ஹி ஹி


Savitha
மே 01, 2025 11:04

தமிழ்நாட்டுல தான் ஜாதியவே ஒழிச்சிட்டீங்களே? அப்புறம் எப்புடி ஜாதி வாரி கணக்கு எடுப்பீங்க? ஒரே கொழப்பமா இருக்கே......


raja
மே 01, 2025 10:37

சூப்பர் சூப்பர் சோன முத்தா... அழகா ஸ்டிக்கர் ஒட்டியே...


Naga Subramanian
மே 01, 2025 08:45

ஜாதிகள் வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு ஜாதி வாரி காணப்பெடுப்பு ஏன் தேவைப் படுகிறது? ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில்தானே உள்ளது. வேலை வாய்ப்பில் அனைவருக்கும் அறிவுத்திறனும் ஏற்றாற்போல சம உரிமை என்று கூறிவிடலாமே? இவ்வாறு செய்துவிட்டால், இந்துக்கள் பண்டிகைகள் போல மற்ற பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கலாமே


S.V.Srinivasan
மே 01, 2025 16:38

அவங்க ஆளுங்களுக்கு அறிவு திறன் இல்லையோ என்னவோ.


Naga Subramanian
மே 01, 2025 08:35

இந்தியாவில் காங்கிரஸ் ஏற்கனவே மறைந்து விட்டது — இவர்கள் இப்படிப் புரட்டுவது வெறும் எரிச்சலும் பொறாமையுமே.


சாமானியன்
மே 01, 2025 08:22

ஸ்டிக்கர் ஒட்டும் கலையை முழுசா அறிந்தவர்கள் ஸ்டாலின் கும்பல்.


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
மே 01, 2025 05:55

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு முதல் பணி. எதிர் கட்சிகளுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு என்று ஒரு எலும்புத்துண்டைப் போட்டு திசை திருப்பியுள்ளது மோடி அரசு. அனைத்துக் கட்சிகளும் இதை மென்று கொண்டிரும்போது தொகுதி மறுவரை கமிட்டியை நிறுவி அனைவர் கை வாய் கட்டிப் போட்டுவிவார் மோடி. கண்டிப்பாக இந்த காட்சி நடைபெறுவதைக் காணக் காத்திருக்கவும். ஆளாளுக்கு ரொம்பதான் துள்ளாதீங்கப்பா.


vivek
மே 01, 2025 08:57

பெரிய பேரு சிறிய அறிவு....என்ன செய்ய


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 01, 2025 10:46

இந்த கருத்தை குறித்து வைத்துக்கொள் நண்பா. நான் சொன்னது ருசுவாகும்போது உனது பெரிய அறிவுக்கு பேரிடி விழும்.


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 02, 2025 04:51

விவேக் இதோ அந்த அணுகுண்டு செய்தி Census may be held in 2026 to match delimitation schedule, says Union Minister Kishan Reddy - The Hindu.


nagendhiran
மே 01, 2025 05:34

வழக்கமான ஸ்டிக்கர் விடியல்?


இராம தாசன்
மே 01, 2025 02:13

அழகிரி / கனிமொழிக்கே கிடையாது - ஆண்டி முத்தாவது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை