உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்செயல் விடுப்பு போராட்டம்: ஊதியத்தை பிடிக்க முடிவு

தற்செயல் விடுப்பு போராட்டம்: ஊதியத்தை பிடிக்க முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தற்செயல் விடுப்பு எடுத்து, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய நிதித்துறை அனுமதி கேட்டுள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. நான்கு ஆண்டுகளாக இதை அரசு கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.பிப்.25ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்று 1.05 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து,போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு சட்ட விதிகளின்படி முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய நிதித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Chandrasekaran
மார் 01, 2025 22:22

இதுவரை போராட்டங்கள் நிதி இழப்பை சந்தித்ததில்லை. சில நாட்கள் கழித்து கணவன் மனைவி உரசல் சமாதானமாகி திரும்பப் பெற்று விடுவாரகள். காவல்துறை மட்டுமே போராட தடை உள்ளது. இதை வேறு ஒருவகையில் சட்டப்படிபே போராடலாம். அது ஒர்க் டு ருழே.. இதற்கு தண்டிக்க வகையில்லை. மக்களும் அரசுக்கு துணை நிற்க முடியாது. மேச்ச மாதிரியும் பொண்ணு பாத்த மாதிரியும் கடந்து விடும். மக்கள் அறிவதற்காக தெருவுக்கு வந்து அரசு மக்களிடம் உங்கள் முக்கால் பங்கு பணமும் இவர்களேவாங்கிச் செல்கிறார்கள் என கூறலைத்துவிடுகிறது.


Suresh Pu
மார் 01, 2025 22:07

தனியார் மற்றும் கூலி வேலை செய்யும் மக்கள் பெறும் துயரத்தை கேளும் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் விடியாது.


Krishna
பிப் 28, 2025 18:18

தற்செயல் விடுப்புக்கு அனுமதி பெற தேவையில்லை என்ற அரசாணை உள்ளது ஆகையால் சம்பளம் பிடிக்க சாத்தியமில்லை


Krishna
பிப் 28, 2025 18:00

தற்செயல் விடுப்பிற்கு அனுமதி பெற தேவை இல்லை என்ற அரசாணை உள்ளது சம்பளம் பிடிக்க சட்டப்படி இடமில்லை ஆகையால் பிடித்தம் செய்ய இயலாது


S.L.Narasimman
பிப் 28, 2025 13:20

பாவபட்ட மக்கள். விடியலின் சத்திய வாக்கை கடந்த நாலு ஆண்டுகளாக நம்பி இருந்தாங்க பாருங்கள் இந்த மாக்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:31

போராடிய தினங்கள் அனைத்தும் அனுமதியின்றி பெறப்பட்ட விடுப்பாகக் கருதி ஊதியம் பிடிப்பது சரியே ..... அத்துடன் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து அதற்கான ஊதியத்தையும் பிடித்தம் செய்யணும் .....


திகழ் ஓவியன்,Ajax, Ontario
பிப் 28, 2025 08:55

அம்மாவைப் போன்ற தைரியம் துருப்பிடித்த இரும்புக் கரத்திற்கு இல்லை. தேர்தல் சமயத்தில் மற்றொரு பொய் வாக்குறுதி கொடுத்து ஓட்டு அள்ளிவிடும்...


Rajagiri Apparswamy
பிப் 28, 2025 07:37

நிதி துறையை ஆதரிக்கும் athevelil


KUMARAN TRADERS
பிப் 28, 2025 07:36

முன்னாள் முதல்வர் சைடு எப்படி வேலை விட்டு எடுத்தாரோ அதேபோல பூரா பேரையும் வேலையை விட்டு எடுக்கணும் ஏனென்றால் இவர்களெல்லாம் தான் இந்த உங்க ஊழல் ஆட்சி கொள்ளைக்கார ஆட்சி வரதுக்கு காரணமே இவர்கள்தான் கள்ள ஓட்டு போடுவதற்கு ஆதரிக்கிறது இவர்கள்தான் இவர்கள் கூற சஸ்பெண்ட் செஞ்சு வீட்டுக்கு அனுப்பனும் அப்பத்தான் தமிழ்நாடு மக்களுடைய புண்ணியம் இவர்களுக்கு கிடைக்கும் இந்தப் பாவக்கார மனிதர்களை வேலையிலே வைக்க கூடாது


Ray
பிப் 28, 2025 07:31

முன்தினம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வேலைநிறுத்த போராட்டத்தை தடை செய்து உத்தரவிட்டதை இவர்கள் கண்டு கொள்ளவேயில்லை.


சமீபத்திய செய்தி