உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.அதை வரவேற்கும் நேரத்தில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிக்காக காத்திருந்த போது, தி.மு.க., நிர்வாகியான ஞானசேகரனுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதில் இதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் காட்டப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.https://x.com/annamalai_k/status/1940064565963972713 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் மாற்றியதை எதிர்த்து இதே தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.தற்போது என்ன மாறிவிட்டது. தேர்தல் நெருங்குவதால், பாரபட்சமற்ற விசாரணை என்ற எண்ணம் தி.மு.க..,வுக்கு தோன்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜூலை 02, 2025 17:57

வேண்டாத மருமகள் உட்கார்ந்தாலும் குற்றம் நின்றாலும் குற்றம் , அவ்வளவு தான்!


RAMESH
ஜூலை 02, 2025 10:15

ஆளுங்கட்சி பயம் வெட்ட வெளிச்சமான தெரிகிறது.... தேர்தலில் தோல்வி உறுதி...ஹ


R.P.Anand
ஜூலை 02, 2025 09:44

சூப்பர் தலைவா நானும் நெனச்சேன்.


முருகன்
ஜூலை 02, 2025 06:45

சிபிஐ வந்தாலும் பிரச்சினை வர விட்டால் அதை வைத்து அரசியல் செய்யும் முயற்சி தோல்வி பெற்றதால் புலம்புகிறார் அதிமுகவால் பதவி இறக்கப்பட்ட தலைவர்


raja
ஜூலை 02, 2025 06:24

ஓங்கோல் கோவால் புரா திருட்டு திராவிட குடும்ப ரூவா இராணீறு கொத்தடிமைகள் எப்படி கதறுகிறானுவோ பார்க்கவே இல்லை படிக்கவே சந்தோசமா இருக்கு... இதே கூமுட்டைகள் தான் அதிமுக ஆட்சியில் ஆக ஆக எடப்பாடி பதவி விலகணுமுன்னு ஊளையிட்டானுவோ ...


Kasimani Baskaran
ஜூலை 02, 2025 03:54

டோப்ப்பாவின் ஆட்சியில் சிறப்பான நிர்வாகமாக இருப்பதால்தான் சிபிஐ விசாரணை. ஓட்டுக்கு 10000 கொடுத்தால் தமிழன் ஓட்டுப்போடாமல் இருந்து விட முடியுமா? ஓட்டுபோடாத ஒவ்வொருவரையும் இது போல போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தால்... ஒவ்வொரு வழக்கிலும் இது போல சாவித்துவாரத்தில் வைத்து வீடியோ எடுக்க ஆள் இருக்குமென்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. மரியாதையாக தீமக்காவுக்கு ஓட்டுப்பொடவில்லை என்றால் தமிழனை வாழவே விட மாட்டார்கள்... ஜாக்கிரதை.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 02, 2025 02:30

அண்ணாமலேக்கு “வட போச்சே” ங்குற ஆதங்கம் தான் இத வெச்சி ஆறு மாசம் பஜனை பண்ணலாமுன்னு கணக்கு போட்டார் போல.


T.sthivinayagam
ஜூலை 02, 2025 01:18

அண்ணாமலை சார் ஏன் சார் எப்ப பார்த்தாலும் நோ பாலே போடுறிங்க அவரு சிக்ஸர் அடிச்சிபுடுறாரு


varatha rajan
ஜூலை 02, 2025 00:23

ஹலோ சார்... தகுதி இருக்க ... மணிப்பூர் அரசு.... இல்லை... தமிழ்நாடு அரசு....c m. ஸ்டாலின் sorry தெரிவித்துள்ளார்


சுந்தர்
ஜூலை 01, 2025 23:25

எப்படியோ எல்லாரும் சேர்ந்து ஜோலிய முடிச்சுட்டாங்க. கடைசில தீர்ப்பும் சரிக்கட்டப்படும். போலீஸ், வழக்கு, தீர்ப்பு எல்லாம் கண்துடைப்பு. மக்கள் மறந்து விடுவர். அதற்குள் ஓட்டிற்கு பணம் கொடுத்து தேர்தல் முடிந்துவிடும். தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நன்றி, வணக்கம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை