உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பொன்.மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டார் என அதே பிரிவில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ல் வழக்கு தொடர்ந்தார். இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2023ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு வந்த சி பிஐ அதிகாரிகள் சுமார் 7.5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.விசாரணைக்கு பிறகு பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது ஓராயிரம் வழக்குகள் உள்ளன. சாகும் விசாரணை நடக்கும். ஓய்வு பெற்ற பிறகும், சிலைகள் மாயம் குறித்து புகார் அளித்து வருகிறேன். என்னிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து உதவி உள்ளேன். உங்களின் நேர்மையில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தபடி சிபிஐ அதிகாரிகள் வந்தனர். நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் ஒரு குற்றவாளியை கூட கைது செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஆக 10, 2024 20:34

காதர் பாட்ஷா - பெயரே சொல்கிறது யாரோ ஆட்சியில் உள்ளவர்கள்தான் அவனை தூண்டி இருக்கவேண்டும் என்று. ஏன் என்றால் வாக்கு வங்கி சமூகத்தினரை சேர்ந்தவன் ஆயிற்றே.


Amruta Putran
ஆக 10, 2024 17:15

An honest officer is Pon ManikkaVel


R.P.Anand
ஆக 10, 2024 15:49

கேசு போட்ட வனுக்கும் சிலைக்கும் என்ன சம்பந்தம். எங்கோயோ இடிக்குதே


S. Gopalakrishnan
ஆக 10, 2024 15:41

ஹிந்து விரோத அரசு ! சாதிக் பாட்ஷா சொன்னாராம், சோதனை செய்தார்களாம். !


venugopal s
ஆக 10, 2024 15:14

இவர் அதிகமாக துள்ளும் போதே சிறிது சந்தேகம் வந்தது!


s chandrasekar
ஆக 10, 2024 16:28

உனக்கு இந்த வியாதி எவ்வளவு நாளாக உள்ளது.மனநல மருத்துவரை போய் பார்.


Rpalnivelu
ஆக 10, 2024 17:02

ஓர் இருநூறு ரூவாவுக்கு இவ்வளவு துள்ளல் உனக்கு தேவையா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை