உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 306 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 306 பேருக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர். கடந்த செப்., 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து கரூரில் முகாமிட்டு, சி.பி.ஐ., அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதை, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். கரூரில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆட்கள் கொள்ளளவு குறித்து, துல்லியமாக அளவீடு செய்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். நேற்று முன்தினம், கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தார், இவர்களை கூட்டத்திற்கு அழைத்து சென்ற த.வெ.க.,வினர் என, 306 பேர் விசாரணைக்கு ஆஜ ராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திலும் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 20:04

சம்பந்தப்பட்ட தவெக கேட்காமலேயே பாஜக, அதிமுக கேட்டு சிபிஐ விசாரணையை வாங்கியது எதற்காகவாம்? கூட்டணியில் சேர்ந்தால் சம்மன் கொடுக்க மாட்டார்கள், இல்லை என்றால்.. இதை புரிஞ்சிக்கிட்டவன் புத்திசாலி.


Chandru
நவ 03, 2025 09:27

Hope the bureau will do a commendable job and bring to book the REAL CULPRITS. The Central organisation should prove, its uniqueness, that the State police cant even be compared to it in investigation process. Bharat MATA KI JAI


Ramesh Sargam
நவ 03, 2025 06:54

இறந்தவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் வருவதற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா?


திகழ்ஓவியன்
நவ 03, 2025 13:03

சதி ஆதாரம் இருக்கு என்கிறார்கள் அந்த வீரர் களுக்கும் அனுப்பி ஆதாரம் கேளுங்கள் இல்லை பிடிச்சி உளறியதிற்கு உள்ளே போடுங்க


Lakshminarasimhan
நவ 03, 2025 06:50

விஜய் நேரடி கைது ?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 04, 2025 01:40

Indirect arrest in the pretext of a CBI case .


Venugopal S
நவ 03, 2025 06:26

நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பினார்களா?


ஜெய்ஹிந்த்புரம்
நவ 03, 2025 07:14

ஹி, ஹி.. நக்கல்யா ஒமக்கு. சிபிஜ நொழைஞ்சதே ஹீரோவை காப்பாத்தத் தானே? அக் 2ம் தேதி விஜய் கேக்காமலேயே அமீத்சா துறை விஜய்க்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்தது. அப்பவே ஏதோ பெருசா சம்பவம் நடக்கப்போகிறது என்று புரிந்து கொண்டவன் அறிவாளி.


vivek
நவ 03, 2025 08:25

ஆப்பு இருக்கு...


vivek
நவ 03, 2025 08:25

உனக்கு வரலையா


duruvasar
நவ 03, 2025 09:22

தங்களுக்க்குள்றயே கம்பு சுத்திக்கொளவதை பார்ப்பதற்க்கு அழகாக இருக்கிறது.


V Venkatachalam, Chennai-87
நவ 03, 2025 10:55

திருட்டு தீயமுக கூட்டம் ஒட்டுமொத்த ஆளுங்களையும் அறிவாளின்னு சொன்ன ஒரே ஒரு ஜென்டில்மேன் ....


V Venkatachalam, Chennai-87
நவ 03, 2025 11:06

பண்ணியவனுக்கு வயிற்றில் புளியை கரைக்குறதை விட முட்டுகளுக்கு ரொம்பவே வயிற்றில் புளியை கரைக்கிறது என்பது கண்கூடு..


visu
நவ 03, 2025 12:00

திமுக அரசுக்கு ஆப்பு தயார் இதுல விஜய் கைது வேற பன்னீங்கண்ணா அவர்தான் CM என்று முடிவே ஆகிடும் ஏர்கனவே நீங்க பயந்து கதறுதனாலதான் இன்றய நிலை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை