உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துறைமுக அதிகாரி வீட்டில் ரூ.27 லட்சம் பறிமுதல் செய்ததாக சி.பி.ஐ., அறிவிப்பு எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்

துறைமுக அதிகாரி வீட்டில் ரூ.27 லட்சம் பறிமுதல் செய்ததாக சி.பி.ஐ., அறிவிப்பு எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்

சென்னை:'லஞ்ச விவகாரத்தில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சென்னை துறைமுக அதிகாரி வீடு உட்பட, ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது' என சி.பி.ஐ., அறிவித்துள்ளது.சென்னை மயிலாப்பூரில் வசிப்பவர் புகழேந்தி. சென்னை துறைமுகத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். 2019 - 2020ல் சென்னை துறைமுகத்தில் குவிந்து கிடந்த பழைய இரும்புகள், கழிவு செய்யப்பட்ட நான்கு இழுவை கப்பல்கள், அன்னம் என்ற எண்ணெய் மீட்பு கப்பல் ஆகியவற்றை அகற்ற டெண்டர் விட்டத்தில் தனியார் ஒப்பந்ததாரரிடம் 70 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சென்னை துறைமுக லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். விசாரணையில், சென்னை துறைமுக அறக்கட்டளை அதிகாரிகள் ஒப்புதல் அளித்தது போல் போலி ஆவணங்கள் தயாரித்து டெண்டர் விட்டு முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது. புகழேந்திக்கு 70 லட்சம் ரூபாய் கைமாறி இருப்பதை, சி.பி.ஐ., அதிகாரிகள் உறுதி செய்தனர்.இது தொடர்பாக நேற்று முன்தினம், சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழேந்தி வீடு, ராயப்பேட்டையில், தனியார் நிறுவன மேலாளர் சேகர், அயப்பாக்கத்தில் ஒப்பந்ததாரர் சண்முகம் ஆகியோர் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'லஞ்ச விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரியில், ஆறு பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கணக்கில் வராத, 27 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !