உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 மார்ச்சுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி

2026 மார்ச்சுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி

சென்னை: “அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், தெற்கு ரயில்வேயில் 593 ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும்,'' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்., தெரிவித்தார்.தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூர் ரயில்வே மைதானத்தில், 79வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில், ஆர்.என்.சிங் தேசியக்கொடி ஏற்றி, ரயில்வே பாதுகாப்பு படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது, அவர் பேசியதாவது:கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், தெற்கு ரயில்வே 12,659 கோடி வருவாய் பெற்றுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 4.5 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் ஜூலை 2025 வரை, 5 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.பயணியர் மற்றும் ரயில் சேவைகள் அதிகரித்தாலும், 91.2 சதவீதம் நேரக்கட்டுப்பாடு பராமரிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டில் மூன்று ஜோடி புதிய ரயில்கள் இயக்கப்பட்டன. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், 5,150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கூடுதல் தேவைக்காக, 108 பொதுப் பயணியர் பெட்டிகள், 90 ரயில்களில் சேர்க்கப்பட்டன.நான்கு வந்தே பாரத் ரயில்கள், 20 மற்றும் 16 பெட்டிகளாக நீட்டிக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் முதல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே, முதல் 'ஏசி' மின்சார புறநகர் ரயில் இயக்கப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளில், 2,800 கி.மீட்டர் பாதையில் வேகம், 80 முதல் 90ல் இருந்து, 100 மற்றும் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டது. மேலும், 415 கி.மீ., பாதையில், வேகம், 110ல் இருந்து 130 கி.மீ.,யாக உயர்த்தப்பட்டது.அம்ரித் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 90 ரயில் நிலையங்களில், 13 நிலையங்கள் மே 22ம் தேதி திறக்கப்பட்டன. மேலும், 15 தயாராக உளளன. மீதம், டிச., 2025க்குள் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தெற்கு ரயில்வேயில், 593 நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

m.arunachalam
ஆக 16, 2025 21:05

நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து முழு சுதந்திரம் கொடுத்தால் ஒரு சில வருடங்களில் நல்ல குடிமகன்களை உருவாக்கலாம் . நோய் நாடி நோய் முதல் நாடி,..........,........


Tamilan
ஆக 16, 2025 13:21

இந்து மதவாத மோடி அரசில் கொலை கொள்ளைகள் பெருகிவிட்டது . தன் பாவங்களையெல்லாம் தீர்க்க கேமரா வைத்துவிட்டால்மட்டும் தடுக்கமுடியாது . ஏற்கனவே கேமராவுக்கு தெரியாமல் டிஜிட்டல் உரையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது


Narayanan Muthu
ஆக 16, 2025 12:21

எல்லா ரயில்களிலும் பாதுகாப்பு கருவி கவாச் எப்போது பொருத்தப்படும். பிஜேபி வந்ததில் இருந்தே ரயில்வே நிர்வாகம் தரம் குறைந்து தனியாருக்கு தாரைவார்க்க வழி வகுக்கப்படுகிறது. எல்லா புகழும் அந்த அதானிக்கே


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 16, 2025 10:01

அதிக பயன்பாடு உள்ள ரயில்வேயில் இப்ப தான் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி என்பது பற்றி ஊடகங்கள் தான் பேச வேண்டும்


தியாகு
ஆக 16, 2025 09:43

ரயில்வே நிர்வாகமே, அந்த சிசிடிவி கேமராக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், இல்லனா கட்டுமர திருட்டு திமுககாரன் யாருக்கும் தெரியாமல் ஆட்டையை போட்டுவிடுவான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை