உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.522.34 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழக வெள்ள பாதிப்புக்கு ரூ.522.34 கோடி கூடுதல் நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளுக்கு, 522.34 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இது தொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த ஆண்டு இயற்கை பேரழிவுகளை எதிர்கொண்ட பீஹார், ஹிமாச்சல பிரதேசம், தமிழகம், புதுச்சேரியுடன், மத்திய அரசு தோளோடு தோள் நிற்கிறது. முறையான வேண்டுகோள் கிடைக்கும் வரை காத்திருக்காமல், பேரிடர்கள் ஏற்பட்ட உடனேயே மத்திய குழுக்களை, இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது.புயல், மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பீஹாருக்கு, 588.73 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு, 522.34 கோடி; ஹிமாச்சல பிரதேசத்திற்கு, 136.22 கோடி; புதுச்சேரிக்கு, 33.06 கோடி என, 1,280.35 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.இது, மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் தொகையாகும். 2024- - 25ம் நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 28 மாநிலங்களுக்கு, 20,264.40 கோடி ரூபாய்; தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 19 மாநிலங்களுக்கு, 5,160.76 கோடி ரூபாயை விடுவித்துஉள்ளது. மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, 19 மாநிலங்களுக்கு, 4,984.25 கோடி ரூபாய், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து, எட்டு மாநிலங்களுக்கு, 719.72 கோடி ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ள பாதிப்புகளுக்கும், மறுசீரமைப்பு பணிகளுக்கும் 37,907 கோடி ரூபாய் வேண்டும்' என, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Indian
ஏப் 07, 2025 10:43

வரும்... ஆனா வராது ...பிஹாருக்கு 2788 கோடி


venugopal s
ஏப் 06, 2025 15:27

மத்திய பாஜக அரசு யானைப் பசிக்கு சோளப்பொரி கொடுத்து விட்டு மார் தட்டிக் கொள்ளலாம்!


S.kausalya
ஏப் 06, 2025 15:09

பங்கு பிரித்தாகி விட்டதா? என்ன தேர்தல் வர போவதால் ஒரு குடும்பத்திற்கு மட்டும் தானா? ஓகே.


Ramesh Sargam
ஏப் 06, 2025 12:58

நதி எங்கே போகிறது? கடலைத்தேடி. நிதி எங்கே போகிறது? திமுகவினர் வங்கிக்கணக்கைத்தேடி.


Mediagoons
ஏப் 06, 2025 10:46

பெரியாரின் தமிழகத்தில் ...விழும் என்ற பயம்


Kasimani Baskaran
ஏப் 06, 2025 07:28

தீம்காவுக்கு தேர்தல் நிதி கொடுக்கும் பாஜகவின் எண்ணம் ஈடேறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.


Mani . V
ஏப் 06, 2025 04:57

அப்புறம் என்ன "அப்பு" ரூபாய் 500 கோடியை நாம் ஆட்டையைப் போட்டு விடலாம்.


xyzabc
ஏப் 06, 2025 04:21

பணம் தின்னும் முதலைகளுக்கு இவ்வளவு ரூ ரூ வா ? மத்திய அரசை வஞ்சித்து கொண்டே இருப்பார்கள். பணமே வரல என்று மக்களிடம் கூவி கொண்டே இருப்பார்கள். கணக்கும் கேட்க கூடாது.


சமீபத்திய செய்தி