உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மருத்துவ கல்லுாரிக்கு மத்திய அரசு விருது

சென்னை மருத்துவ கல்லுாரிக்கு மத்திய அரசு விருது

சென்னை:சென்னை மருத்துவக் கல்லுாரி, 190 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. இங்கு, பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. பல்நோக்கு ஆராய்ச்சி பிரிவில், மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர், மருத்துவம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மருத்துவக் கல்லுாரிகளின் ஆய்வு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்து, அதற்கான விருதுகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதால், 10க்கு 9 மதிப்பெண் பெற்று, மேன்மைமிகு விருதை சென்னை மருத்துவக் கல்லுாரி பெற்றுள்ளது.டில்லியில் நேற்று நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் கங்காதரன், செயலர் ராஜீவ் பால் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்ட விருதை, சென்னை மருத்துவக் கல்லுாரி முதல்வர் தேரணிராஜன் பெற்றுக் கொண்டார்.உலகின் தலைசிறந்த மருத்துவக் கல்லுாரிகள் பட்டியலில், சென்னை மருத்துவக் கல்லுாரி, 60ம் இடம் பிடித்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை