உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் உதவி மானியங்கள் தமிழகத்திற்கு 30.54 சதவீதம் அதிகரிப்பு

மத்திய அரசின் உதவி மானியங்கள் தமிழகத்திற்கு 30.54 சதவீதம் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மொத்த உதவி மானியங்கள், நடப்பாண்டு மதிப்பிடப்பட்ட வரவுகளில், 30.64 சதவீதம் அதிகம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக பட்ஜெட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள் உட்பட, தமிழகம் பெறும் உதவி மானியங்கள், 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மதிப்பீடு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டு உள்ள, 3,952 கோடி ரூபாயை உள்ளடக்கியது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மொத்த உதவி மானியங்கள் 7,302 கோடி ரூபாய். இது, 2025 - 26ல் மதிப்பிடப்பட்ட வரவுகளில், 30.64 சதவீதம். இதை முந்தைய ஆண்டில் பெறப்பட்ட, 5,204 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, 40.31 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டுக்குரிய உதவி மானியங்களை, கடந்த ஆண்டிலேயே விடுவிக்காமல் நிலுவையில் வைத்து, தாமதமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசு விடுவித்ததால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட உதவி மானியங்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ரா
அக் 19, 2025 11:17

மகளிர் இலவச பேருந்து திட்டத்தை யாரும் கேட்காமலேயே துவக்கினர். அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு அரசு இழப்பீடு கொடுக்காமல் போக்குவரத்து கழகத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்களுக்கு ஒய்வுப் பணப்பலன்களை அளிக்காமல் தவிக்க விட்டுள்ளார்கள். பணியாளர்களின் PF பணத்தையும் செலுத்தாமல் ஏமாற்றிய செய்திகள் வந்துள்ளன. இப்படிப்பட்ட மோசமான நிர்வாகம் செய்யும் அரசுக்கு மத்திய நிதி எதற்கு?. அதையும் ஆட்டைய போடவா?


பாலாஜி
அக் 19, 2025 08:29

பல புயல்கள், வெள்ளங்கள் ஏற்படுத்திய சேதங்களுக்கு பல ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு நிவாரணம் இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை?


ஆரூர் ரங்
அக் 19, 2025 11:11

நெடுங்காலமாக மிகவும் முன்னேறி தன்னிறைவு பெற்ற டாப் மாநிலங்கள் தம்மைத்தாமே பார்த்துக் கொள்ளவேண்டும். வளரயியலாமல் தவிக்கும் பிற்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய உதவி தேவை.


Indian
அக் 19, 2025 07:54

தேர்தலுக்காக


vivek
அக் 19, 2025 10:20

அதில் ஆட்டைய போடுவியே


kjpkh
அக் 19, 2025 10:52

தேர்தலுக்காக நீங்கள் செய்ததெல்லாம் சரியா. தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை இப்போது எப்படி வந்தது. உங்களுடன் ஸ்டாலின் முதியோர்களுக்கு வீடு தேடி வரும் ரேஷன் நலம் காக்கும் ஸ்டாலின் இதெல்லாம் இப்போது எதற்காக வந்தது. உங்களுக்கு வந்தால் ரத்தம். அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி. யோசித்துப் கருத்து போடுங்கள்.


Kasimani Baskaran
அக் 19, 2025 07:00

மானியம் நேரடியாக நுகர்வோருக்கு சென்றால் நல்லது. மாடல் கொள்ளை அரசு வாய்ப்பு கிடைத்தால் ஏப்பம் விட்டுவிடும் வல்லமை படைத்தது.


xyzabc
அக் 19, 2025 02:45

இதை எல்லாம் ஒப்பு கொள்ள தமிழ் மக்களுக்கு திறன் கிடையாது.


புதிய வீடியோ