உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு திட்டம்: சரத்குமார் வரவேற்பு

மத்திய அரசு திட்டம்: சரத்குமார் வரவேற்பு

சென்னை:

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் சரத்குமார் அறிக்கை:

'கடந்த 2030க்குள் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை, 50 சதவீதம் அளவுக்கு குறைக்க, நாடு முழுதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால், முதல் ஏழு நாட்களுக்கு, தனியார் மருத்துவமனைகளில், 1.50 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும்' என, மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.சாலை விபத்துகளில் சிக்கி, முதலுதவியோ, உடனடி சிகிச்சையோ கிடைக்கப் பெறாமல், உயிருக்காக போராடுவோரின் உயிர்களை பாதுகாக்க, இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும். மக்கள் நலன் காக்கும் அரசாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திகழ்கிறது என்பதற்கு, இத்திட்டம் மற்றொரு சான்று. இத்திட்டத்திற்கு மக்களின் வரவேற்பு அதிகரித்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள மத்திய அரசுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சுராகோ
மே 08, 2025 17:54

இந்த திட்டத்தை காப்பியடித்து தமிழ்நாட்டில் தமிழக அரசு கூடியவிரைவில் ஒரு அரசாணை வெளிவிடும் பாருங்கள்.


சமீபத்திய செய்தி