மேலும் செய்திகள்
இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு துவங்கியது
03-Mar-2025
சென்னை:''கடந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு, 7,040 டன் அரிசி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலர் சுபேர்கான் ஏற்பாட்டில், சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது:உருது அகடமி, தி.மு.க., ஆட்சியில் துவக்கப்பட்டது. காயிதே மில்லத் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. காயிதே மில்லத் மகளிர் கல்லுாரி உருவாக்கியதுடன், காயிதே மில்லத் ஆண்கள் கல்லுாரிக்கும் தி.மு.க., ஆட்சியில் தான் நிலம் வழங்கப்பட்டது.பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு, 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. கருணாநிதி ஆட்சி காலத்தில், இஸ்லாமியர்களுக்கு செய்த பல்வேறு நலத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நான்காண்டு கால ஆட்சியிலும், இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை செய்து வருகிறது. பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைப்பு செய்ய, 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகூர் தர்காவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாகூர் தர்காவை புனரமைக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடக்கின்றன. சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. ஆனால், 12 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகையை, தி.மு.க., அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கடந்த ஆண்டு 7,040 டன் அரிசி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8,000 டன் அரிசி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்கள் தங்குவதற்காக, சென்னை விமான நிலையம் அருகில் நங்கநல்லுாரில், 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஹஜ் இல்லம் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பட்ஜடெ்டில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களை புனரமைக்கும் வகையில், 10 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
03-Mar-2025