தமிழகத்தில் இடைநிற்றல் இல்லை மத்திய ஆய்வறிக்கையில் தகவல்
சென்னை,:மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், 'தமிழகத்தில் இடைநிற்றல் இல்லை' என கூறப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தமிழகத்தில் பள்ளி படிப்பை துவக்கிய, 100 சிறுவர்களில்,நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள், 2019ல், 99 பேராக இருந்தது, 2024ல், 100 பேராக உயர்ந்துஉள்ளது.சிறுமியரில் 97.5 ஆக இருந்தது 100 ஆக அதிகரித்து இடைநிற்றல் இல்லாத நிலைஉருவாகி உள்ளது. இந்த விபரம் மத் திய கல்வி அமைச்ச கம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.பீஹாரில், 2019ல் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை, 78.5 சதவீதமாக இருந்தது; 2024ல் 65 சதவீதமாகவும், மாணவியர் எண்ணிக்கை, 2019ல் 81.1லிருந்து, 2024ல், 64.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை, 51.2 சதவீதத்தில் இருந்து, 38.8 சதவீதமாகவும், மாணவியர் எண்ணிக்கை 51.6லிருந்து, 42.3 சதவீதமாகவும் குறைந்து, பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதேபோல ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது,தமிழகத்தில் காலை உணவு திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால், பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் குழந்தைகள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கல்வி கற்கின்றனர் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.