உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் மையம்?

ரயில்வே தேர்வுக்கு தமிழகத்தில் மையம்?

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:தெற்கு ரயில்வேயில், உதவி 'லோகோ பைலட்' பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு, நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 90 சதவீதம் தேர்வர்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.ஆயிரம் கி.மீ.,க்கு அப்பால் சென்று தேர்வு எழுதுவது, தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கும். மேலும், இது போன்ற குளறுபடிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என்ற உந்துதலை குறைத்து விடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.எனவே, தேர்வர்களின் கோரிக்கையை மனதில் வைத்து, தமிழக தேர்வர்களுக்கான மையங்களை, தமிழகத்திலேயே ஒதுக்க மத்திய அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். இதே கருத்தை, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனும் வலியுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை