உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு: பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்பு: பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (டிச., 1) முதல், 3ம் தேதி வரை கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.கோவை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது; 1077 மற்றும், 0422 - 2306051 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.அவசர கட்டுப்பாடு மைய எண்: 0422 - 2302323, வாட்ஸ்அப் எண்: 81900 00200அத்தியாவசியத் தேவை தவிர, இதர பணிகளுக்காக, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து, வீடுகளில் இருக்க வேண்டும்.அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதாலோ அல்லது விழுவதாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும் அல்லது உறுதியாக நிலை நிறுத்த வேண்டும். விளம்பர பலகைகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும்.நீர் நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ மற்றும் செல்பி எடுக்கச் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.ஆற்றங்கரைகள் மற்றும் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மழைக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.உயர் மின்சாரம் செல்லக்கூடிய மின் கம்பங்களுக்கு அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்; மின் சாதனப் பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். பழுதடைந்த, சிதிலமடைந்த கட்டடங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், வீட்டுக்குள் தண்ணீர் சூழ்ந்தால், நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில், 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.தரைப்பாலங்கள் வெள்ளநீர் செல்லும்போது, அவ்வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வால்பாறை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு, அணைக்கட்டுகள், நீர் வீழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என, கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ديفيد رافائيل
டிச 01, 2024 11:02

எல்லாமே நல்லா தான் இருக்கு Emergency னு கூப்பிட்டா HELP தான் உடனே கிடைக்காது.


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:28

நல்லா தமிழ், ஆங்கிலம் எழுதறீங்களே, அது எப்படி?


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 13:30

இன்னும் மழை ஆரம்பிக்கவேயில்லை யே.. அதுக்குள்ள உங்களுக்கு என்ன எமர்ஜென்சி? எந்த நம்பர் கூப்பிட்டீங்க?


வைகுண்டேஸ்வரன்
டிச 01, 2024 08:44

சூப்பர். சிறப்பு. மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களுக்கு அறிவுறுத்தல்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது 1077 மற்றும், 0422 - 2306051 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு. இது தான் மக்கள் நல ஆட்சி. முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசும், அமைச்சர்களும், அதிகாரிகளும் சிறப்பாகப் பணியாறுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை