மேலும் செய்திகள்
கோவை - நீலகிரியில் இன்று கனமழை
27-Aug-2025
சென்னை:'கோவை, நீலகிரி உட்பட நான்கு மாவட்டங் களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா, 18 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட மேற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஒடிஷா அருகில் நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் அக்., 2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாக வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்; சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
27-Aug-2025