கேட் தேர்வு விண்ணப்பம் தேதி மாற்றம்
சென்னை: 'கேட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தேதி மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., -- என்.ஐ.டி.,க்களில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர, 'கேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். கடந்த 2027ம் ஆண்டுக்கான, 'கேட்' நுழைவு தேர்வை, சென்னை ஐ.ஐ.டி., நடத்துகிறது. தேர்வு, 2027, பிப்., 6, 7, 13, 14, 20, 21ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் 14ம் தேதி தொடங்கி, செப்., 21ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, விண்ணப்பப் பதிவு காலம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. வரும், 27 முதல், செப்., 27ம் தேதி வரை, 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அபராத கட்டணத்துடன், அக்., 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.