உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை: சொல்கிறார் அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்; 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை: சொல்கிறார் அண்ணாமலை

ராமநாதபுரம்: '2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ராமநாதபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: லோக்சபா தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் செய்யாத நிலையில் அது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டுவது தேவையில்லாதது. இதனால் தான் பா.ஜ., அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது. எதற்காக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கிறார் என தெரியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=45qa32vg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தொகுதி எண்ணிக்கை

விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையின் போது தமிழகத்திற்கு தொகுதிகளுடைய எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இவ்வளவு தெரிவித்தும் தேவையில்லாமல் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறு வரையறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசே உறுதி கூறியும், அதை நம்பாமல் முதல்வர் எந்த அடிப்படையில் தொகுதியில் எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்து வருகிறார்.

நடவடிக்கை

மீனவர்கள் பிரச்சனையை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏற்கனவே பேசி உள்ளேன். விரைவில் ராமநாதபுரம், புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து மீனவர்கள் கைது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். இந்திய, இலங்கை அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.மீனவர்கள் போர்வையில் சிலர் கடத்தலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதால் தான் புதிதாக பொறுப்பேற்ற இலங்கை அரசு தீவிரமாக தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. மேடை போட்டு பா.ஜ.,வினரை திட்டுவது தான் தி.மு.க.,வினரின் பிரதான வேலையாக உள்ளது. அமைச்சர் சேகர் பாபு நான் எங்கெல்லாம் வேலை செய்தேனோ அங்கெல்லாம் சென்று சோதனை செய்ய எனது சொந்த செலவில் அனுப்பி வைக்கிறேன்.

முடிவுரை

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 2026ல் தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதப்படும். தி.மு.க.,வை பொறுத்தவரை காலை எழுந்தவுடன் என்னை திட்டுவது தான் முதல் வேலையாக உள்ளது. பொதுக்கூட்டம் போட்டு பா.ஜ.,வை திட்டுவதற்கு தான் தி.மு.க.,வுக்கு நேரம் உள்ளது. மக்கள் பிரச்னை குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. மும்மொழிக் கொள்கை தொகுதி வரையறை போன்ற தேவையில்லாத பிரச்னைகளை திமுக எழுப்பி வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

கேள்வி, பதில்!

அமைச்சர் செந்தில் பாலாஜி உங்களை இனி எப்போதும் நீங்கள் செருப்பு போட முடியாது என விமர்சித்திருப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'நான் அவரைப்போல் சிறைக்கு செல்லவில்லை, செருப்பு போடாமல் தான் நடக்கிறேன். அது ஒன்றும் தவறில்லை' என்றார்.பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் இருமொழிக் கொள்கையில் படித்த அண்ணாமலை மும்மொழிக்கு ஆதரவு அளிப்பது ஏன் என கூறியதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'படித்திருந்தால் தெரியும், பாவம் அவர் படிக்காதவர் அவருக்கு என்ன தெரியும்' என அண்ணாமலை விமர்சித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Janarthanan
மார் 02, 2025 22:04

எதிர் கட்சிகள் ,ஆளும் அரசை குறை கூறுவதை மட்டுமே செய்கிறார்கள் தமிழ் நாட்டில் தற்போது மாணவர் , மாணவியர், மகளிர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கியவர்களுக்கான திட்டங்கள் குறித்தும் ஏதும் சொல்வதில்லை. தற்போது வலுவான எதிர்கட்சிகள் ஏதும் இல்லை .தற்போதயா அரசு 1.5 கோடி மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தேர்தலுக்கு முன்பாக 2 கோடியாக உயரும். மேலும் மகளிருக்கு இலவச பேருந்து விடப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு கோடி மகளிர் ( மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள் அடங்கும் ) பயன்பெறுகிறார்கள். ஆக மொத்தம் மூன்று கோடி மகளிர் தற்போதய அரசின் திட்டத்தால் பயன் பெறுகின்றனர் . மேலும் இத்திட்டம் மகளிரடையே மிகுந்த வரவேற்பும், செல்வாக்கும் பெற்றுள்ளதால் தற்போதைய ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் சுமார் 6 கோடி ஆகும் . இவர்களில் 50 சதவீதம் மட்டுமே வாக்களிக்கின்றார்கள். ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை .


Krishnamurthy Venkatesan
மார் 02, 2025 20:12

திரு அண்ணாமலை, திரு எடப்பாடி, திரு சீமான், திரு அன்புமணி, திரு பன்னீர்செல்வம், திரு வாசன் ஆகியோருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். வலுவான கூட்டணி இருந்தால் மட்டுமே திமுகவை தேர்தலில் வெற்றி பெற முடியும். இதைத்தான் பொதுமக்களும் விரும்புகிறார்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இவர்களின் ஊழலை ஆதாரத்துடன் டெல்லியில் கொடுப்பதுமட்டுமல்லாமல் அதனை விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும். இல்லாவிடில் நீங்கள் சொல்லும் குற்ற சத்துக்களை மக்கள் நிராகரிப்பவர்கள். கூட்டணி கட்சிகளினால்தான் திமுகவின் ஒட்டு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. நீங்கள் தனியாக போட்டி இடுவதால் திமுகவிற்கு மறைமுகமாக உதவி செய்கிறீர்கள். ஒற்றுமையாக சேர்ந்து தேர்தலை எதிர் கொள்ளுங்கள். மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.


beindian
மார் 02, 2025 18:18

இவரு ஒருத்தர் அப்பப்ப வந்து நானு ரௌடிதான் நானும் ரௌடிதான்னு காமெடிபன்னிகிட்டு இருந்தால் போதுமா ? இதனால்தான் ஓவ்வொரு தேர்தலிலும் சாவடி அடிக்கிறார்கள் மக்கள்


Visu
மார் 02, 2025 19:08

நீங்க இந்தியனா இந்தியஉணர்வோட இருந்தால் இப்பிடி முட்டு குடுக்க மாட்டீங்க


ramesh
மார் 02, 2025 17:45

அண்ணாமலை ,தாங்கள் மட்டும் முதல்வரை பார்த்து மருத்துவரை பார்க்கவேண்டும் என்று தரம் தாழ்ந்து பேசுகிறீர்கள் .அப்படி இருக்கும் போது dmk காரர்கள் திரும்பவும் பேசினால் ஏன் தங்களால் பொறுத்து கொள்ள கொள்ள முடிய வில்லை


Uuu
மார் 02, 2025 16:56

அண்ணாமலை சொல்வது 100% உண்மை. தமிழர்கள் சிந்தித்து ஓட்டு போட்டால் எல்லாம் சரியாக நடக்கும். 200 ரூபாய்க்கு ஆசை படும் உபிஸ் சிந்திக்க மாட்டான்


Venkataraman
மார் 02, 2025 16:47

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் பாஜக மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால்தான் வெற்றி பெற முடியும். தமிழக மக்கள் திமுகவை விரட்டி அடிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் எதிர்கட்சிகளின் ஓட்டுகள் சிதறாமல் ஒற்றுமையுடன் போட்டியிடுவது அவசியம்.


Velan Iyengaar
மார் 02, 2025 16:14

உனக்கு தான் வரும் தேர்தலில் முடிவுரை எழுதுவார்கள் ........ எழுதிவைத்துக்கொள் ..... அரசியல் அனாமதேயம் ஆகிவிடுவாய் ....


Visu
மார் 02, 2025 19:14

காமராஜரையேத் தோற்கடித்த உன்னைப்போன்ற கபோதிகள் பொய் பெயரில் திரியும் தேசதுரோகிகள் நிறைந்த மாநிலமிது. தோற்றால் அண்ணாமலைக்கு நட்டமில்லை மானிடகுலத்திற்கு நட்டம் நல்லவர்களுக்கு நட்டம்.


venugopal s
மார் 02, 2025 15:32

அடுத்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு யார் வெற்றி பெற்றாலும் அண்ணாமலை சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைவது மட்டும் உறுதி என்று தோன்றுகிறது!


Visu
மார் 02, 2025 19:18

அவர் சட்டை கிழிச்சுக்கிறாரோ இல்லையோ சார்களுக்கு கொண்டாட்டம். உங்க வீட்ல பெண்பிள்ளையிருந்தால் கவனமாயிருங்க


பாமரன்
மார் 02, 2025 15:05

டெல்லி யூனிவர்சிடில பெரிய ஜி மாதிரி ரகசிய டிகிரி வாங்கினவங்க தான் படிச்சவங்கன்னு சொல்றாப்லயோ...??? பீப்பி ஊதுப் போகும் பகோடாஸ் சொன்னால் தேவலை....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 02, 2025 16:02

பிரதமர் சொன்ன ஒவ்வொருத்தர் வங்கி கணக்கிலும் 15லடசம் போடும் அளவிற்கு இந்தியர்களின் கருப்புப்பணம் ஸ்விஸ் வங்கியில இருக்கு என்பதை 15லடசம் கொடுப்பேன் என்று மோடி சொன்னார் என்று அலறி புலம்பிய அறிவாளி கூட்டம் இன்று மக்கள் தொகுதி சீரமைப்பு மக்கள்தொகை அடிப்படையில் அமையாது தவிர தொகுதி எண்ணிக்கையும் குறையாது என்று பிரதமரே உத்திரவாதம் அளித்தும் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள் என்று புலம்பும் கொத்தடிமைகளின் பித்துக்குளிதனத்தை என்னவென்று சொல்வது....!!!


Bahurudeen Ali Ahamed
மார் 02, 2025 20:05

ஹாய் கோபால் சகோ உங்களுடைய கூற்றுபடிப்பார்த்தால் அந்த கருப்புப்பணத்தை மீட்டுவிட்டாரா மீட்கவில்லையென்றால் அவர் வெற்றுச்சவடால்தான் விட்டார் என்று ஒப்புக்கொள்ளவேண்டும் கருப்புப்பணத்தை மீட்டுவிட்டார் என்றால் அதைவைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசென்றிருக்கவேண்டும் விலைவாசி உயர்வுக்கு காரணமான எரிபொருட்கள்மீது மானியம் கொடுத்து பெட்ரோல் டீசல் எரிவாயு சிலிண்டர் விலைவாசியை குறைத்திருக்கவேண்டும் அதைவிடுத்து பலலட்சம் கோடிகளில் கடன் வாங்குவது ஏன், அந்த குற்றச்சாட்டுக்கு அமித்ஷா ஜூம்லா அதாவது சும்மா அரசியலுக்காக கொடுக்கும் பொய்வாக்குறுதி என்று எதற்காக கூறினார்


Premanathan Sambandam
மார் 02, 2025 14:59

இப்படியே 2047 வரையிலும் பினாத்திக்கொன்டே இருக்கவேண்டியதுதான் ஒரு கூட்டணியை அமைத்து வெற்றிக்கு வழி பார்ப்பதை விட்டு விட்டு வெறும் பேச்சு தினமும் கிடைத்த மேடையில் பேசுவது வடி கட்டின முட்டாள்தனம்


Senthoora
மார் 02, 2025 16:47

கனவுகாணும் உரிமை எல்லோருகும் இருக்கு என்று ஐயா அப்துல் கலாம் சொன்னார். இவர் என்னாடா என்றால், தான் கண்ட கனவை , பிஜேபி பணத்தில் மேடை போட்டு பேசுகிறார். அவளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை