உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை : சிறுநீரகங்கள் திருட்டு வாயிலாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், டாக்டர் கணேசன் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், நுாற்றுக்கணக்கான ஏழைகளிடம் சிறுநீரக திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக, தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த பிரபல சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.எம்.கணேசன் மற்றும் இடைத்தரகர்கள், சிறுநீரக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.இந்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது, அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது.அதையடுத்து, டாக்டர்கள் வி.எம்.கணேசன், ஜி.திருமால், என்.விஷ்வபிரியா ஆகியோர் மீது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், டாக்டர் வி.எம்.கணேசன் உள்பட 3 பேர் மீதும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, குற்றம்சாட்டப்பட்ட மூன்று டாக்டர்களும் நேரில் ஆஜராகினர். பின், அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கு விசாரணையை, ஏப்., 8ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் சாட்சி விசாரணை துவங்கும் என அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை