உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரட்டை செயலிக்கு அசுர வேகத்தில் கூடுது மவுசு; 1 கோடி பயனர்களை கடந்து புதிய சாதனை!

அரட்டை செயலிக்கு அசுர வேகத்தில் கூடுது மவுசு; 1 கோடி பயனர்களை கடந்து புதிய சாதனை!

நமது சிறப்பு நிருபர்

சுதேசி செயலியான அரட்டைக்கு நாள் தோறும் மக்கள் ஆதரவு பெருகி கொண்டே செல்கிறது. தற்போது அரட்டை செயலியை டவுண்லோடு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது.தற்போதைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததாக சமூக வலைதளதங்கள் இருக்கிறது. அந்த சமூக வலைதளங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் உருவாக்கியது தான். இதற்கு போட்டியாக தான் தற்போது 'ஸோகோ' நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருந்த, சுதேசி செயலியான அரட்டையின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு அநியாய வரி விதித்த நிலையில், அந்த நாட்டு தயாரிப்புகள் மீது அதிருப்தி அடைந்த மக்கள் கவனம், சுதேசி செயலியான அரட்டை மீது திரும்பி உள்ளது. இதனால், நாளொன்றுக்கு சில ஆயிரம் புதிய பயனர்கள் சேர்ந்து கொண்டிருந்த 'அரட்டை' செயலியை, தற்போது தினமும் லட்சக்கணக்கான பேர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அந்த செயலியில் இடம் பெற்று இருக்கும் பிரத்யேக வசதிகள் தான். வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகியவற்றில் இருக்கும் அம்சங்களுடன், அவற்றில் இல்லாத அம்சங்களும் இதில் உள்ளன. இதை பயன்படுத்துவோர், இணையத்தில் தொடர்ந்து அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி மதிப்புரைகள் எழுதி வருகின்றனர். இதுவும் டவுண்லோட் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.குறைந்த இணைய வேகம் இருக்கும் இடத்திலும், அரட்டை செயலி வேலை செய்யும். ஆண்ட்ராய்டு டிவியிலும் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப் செயலியை காட்டிலும் சிறப்பான ஆடியோ, வீடியோ அழைப்பு வசதிகள் அரட்டையில் உள்ளன. பயன்படுத்துவோருக்கு, தங்கள் டேட்டா குறித்த அச்சம் எதுவும் தேவையில்லை என்றும் அரட்டை செயலி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.எனவே அரட்டை செயலிக்கு மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை டவுண்லோடு செய்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து உள்ளது.தினமலர் அரட்டை சேனலை பாலோ செய்யுங்கள்!சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருக்கிறது. தினமலர் அரட்டை செயலில் உடனுக்குடன் முக்கிய செய்திகள் அனைத்தும் வெளியிடப்படுகிறது. இதனை நீங்கள் காண,தினமலர் அரட்டை சேனல் லிங்க் இதோ!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

என்றும் இந்தியன்
அக் 08, 2025 17:20

இன்று தான் சேர்ந்தேன்???1 கோடி பயனர்களா?????


பெரிய குத்தூசி
அக் 08, 2025 12:29

அரட்டை செயலியில் இரு வெவேறு மொபைல் எங்கள் பயன்படுத்துவது போன்ற feature சேர்த்து இரண்டு வாட்ஸாப்ப் நம்பர் களை பயன்படுத்துவதுபோல் மேம்பாடு செய்தால் இந்தியர்கள் அனைவரும் மேலும் விரும்பி சேர்வர். என்றால் இந்தியர்கள் 2 க்கு மேற்பட்ட மொபைல் எங்கள் வைத்துள்ளனர். வாட்ஸாப்ப் ல் ஒரு நம்பர் மட்டுமே பயன்படுத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொன்று வாட்சப் ல் இருக்கும் AI சர்ச் அமைப்பை விட மேம்பட்டதாக சேர்த்தால் சிறப்பாக இருக்கும்


KavikumarRam
அக் 08, 2025 12:23

இன்னும் புதிய வசதிகளுடன் நவம்பரில் புதிய உத்வேகத்துடனும் அரட்டை ஆப் செயல்படும்னு ஸ்ரீதர் வேம்பு சொல்லிஇருக்கார். தற்போது வெளிநாட்டு போன் நம்பர்களுக்கு ஒடிபி வசதி புதிப்பிக்கப்படவில்லை. அதுவும் சேர்ந்தால் பயனாளர்கள் பன்மடங்கு அதிகரிப்பார்கள். நல்லது நடக்கட்டும்.


ديفيد رافائيل
அக் 08, 2025 11:11

Whatsapp ல் இருக்குற அதே features இதுல கொண்டு வந்தா இந்த app சீக்கிரம் வளர்ச்சியடையும்


sengalipuram
அக் 08, 2025 11:10

திராவிடிய அடிமைகளுக்கு Zoho நிறுவனத்தின் பின்புலம் பார்ப்பனர் என்பதால், அரட்டை செயலியை பாராட்ட மனம் வராது.


Madras Madra
அக் 08, 2025 11:00

இது எல்லாரையும் படிக்க வச்சதனால் நிகழ்ந்த சாதனை


முதல் தமிழன்
அக் 08, 2025 10:21

சொம்பு தூக்கி


ஜே குருநாதன்
அக் 08, 2025 10:19

கடந்த ஒரு மாதம் முன்னர் வரை ஒரு லட்சம் பேருக்கு உள்ளாகவே இதை அறிந்திருந்தனர். இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சுதேசி உணர்வு காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது


டி சங்கரநாராயணன் ஈரோடு
அக் 08, 2025 10:17

மேலும் பல பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்


MR SSM
அக் 08, 2025 10:05

என்னய்யா சுதேசி? தமிழ் செய்தியில் தமிழ காணோம் .


புதிய வீடியோ