உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் போலீசில் திடுக் புகார்!

சவுக்கு சங்கர் போலீசில் திடுக் புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தான் மருத்துவமனையில் இருந்தபோது, தன் மருத்துவ ஆவணங்களில் ஒன்று திருடப்பட்டு விட்டதாகவும், அதில் பொய்யான தகவல்களை சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும், சவுக்கு சங்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், பெண் போலீசாருக்கு எதிராக அவதுாறு பரப்பியதாக சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த வழக்குகள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் சமீபத்தில் விடுதலையானார். சில வாரம் முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.அப்போது அவரது மருத்துவ ஆவணங்களில் ஒன்று திருடப்பட்டதாகவும், அதில் அவருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பதாக பொய்யான தகவலை சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் சவுக்கு சங்கர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இவ்வாறு பொய்யான தகவல் பரப்பியவர்கள் மீது, சிவில் மற்றும் கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Mahendran Sivasubramanian
அக் 31, 2024 05:06

Savukku shankar would suceed in all casea only improprr investigation of incompetant police officers the trial would be interestin i am expecting seedy trial


PerArivalan
அக் 30, 2024 16:43

வருந்த தக்கது.


Selvaraj
அக் 30, 2024 09:34

புனைந்து பதிவிடப்படும் செய்திகள்..?


K. Loganathan Kanthan
அக் 30, 2024 08:59

உண்மையா...


siva
அக் 29, 2024 22:54

திமுகவை வெளிப்படையாக எதிர்ப்பவர்களுக்கு இது தான் - இதனை முன்பே உணர்ந்திருந்தால் இந்தப் பிரச்சணைகளைத் தவிர்த்திருக்கலாம்.பாவமாக இருக்கிறது.ஏன் என்ற கேள்வி கேட்டால் இது தான் இது தமிழ்நாடு.


Sudha
அக் 29, 2024 21:20

யு டியுப் ,போலீஸ், மத்திய மாநில அரசு அத்தனையும் ஆட்டுவிக்கும் போலி. இதுவரை என்ன சாதித்தார்?


Yasararafath
அக் 29, 2024 21:18

சவுக்கு சங்கர் பெண்கள் மீது வழக்கு தொடந்தது செல்லும்


Ramesh Sargam
அக் 29, 2024 20:40

வேற யாரு, அந்த திமுகவினர் தவிர வேற யாரும் இப்படி கீழ்த்தரமான காரியங்களை செய்திருக்க வாய்ப்பில்லை.


raja
அக் 29, 2024 20:24

அவ்ளோ பெரிய அப்பா டக்கரா சவுக்கு சங்கர்..


Muthu Samy
அக் 29, 2024 20:00

இவர் கூறிய புகார் குறித்து,செய்திவெளியிட்ட வக்கீலே,என்மீது,புகார் கொடு,பார்க்கலாம்,நான் கோர்ட்டில் சந்திக்கிறேன் ,என்று கூறியதன் பின்னர்,இவருக்கு ரோஷம் வந்துள்ளது,நம்பிட்டோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை