உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் விலகல்

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு விலகியது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது எனக்கூறி விலகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Selvaraj
ஆக 01, 2024 07:26

ஒரே சட்டம் வெவ்வேறு நீதிபதிகளால் தன்னிச்சையாக கையாளப் படுகிறது. பாதிக்கப் படுவது சாமானியர்கள்..


P.Sekaran
ஜூலை 29, 2024 11:38

சவுக்கு சங்கர் சில உண்மைகளை வெளிகொண்டு வந்து இருக்கிறார் இதில் எந்த ஒரு ஆட்சேபணையும் இல்லை. இது மாதிரி ஆட்கள் உலகில் இருந்தால் தான் தப்பு செய்ய தயங்குவார்கள். இங்கேதான் தப்பு செய்பவர்கள் அதிகம் இருக்கிறார்களே எந்த துறையிலும் ஆதலால் தீர்ப்பில் குறைப்பாடு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் சொன்னால் தான் தெரிகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் கீழ்நீதிமன்றம் விடுவித்துவிட்டது . உச்ச நீதிமன்றம் வேலைக்கு பணம் வாங்கியது உண்மை என்றால் நீ தப்பு செய்திருக்கிறாய் என்று ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது ஆதலால் வழக்கு நடத்து என்றது கீழ்நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் இருக்கிறது உயர்நீதி மன்றத்திற்கு உச்சநீதிமன்றம் இருக்கிறது. இதில் நீதிபதிகள் நான்கையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது சால சிறந்தது.


Singer Muthu
ஜூலை 27, 2024 10:42

சவுக்கு சங்கர் ஒன்றும் நியாயமான ஆள் கிடையாது.கள்ளக்குறிச்சி மானவி ஶ்ரீ மதி வழக்கில் உண்மைக்கு புறம்பாக அந்த பள்ளி நிர்வாகத்திற்க்கு மட்டும் பணம் வாங்கி கொன்டு பேசினார் என்று அவர் கூடவே இருந்த அவர் பிஏ சொல்லிருக்கிறார்...மக்களுக்காக அவர் ஒரு போதும் பேசியது இல்லை...


RAJA SEKARAN
ஜூலை 28, 2024 09:42

200 ரூபாய் கிடைத்ததா 250 கிடைத்ததா இதுவரைக்கும் சங்கர் சொன்னதை நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கவில்லை ஆகையால் சங்கர் சொன்னதுதான் உண்மை ஸ்ரீமதி வழக்கில்


NAGARAJAN
ஜூலை 27, 2024 07:09

ஏனென்றால் அந்த நபர் அயோக்கிய தனங்களே பிழைப்பாக வைத்திருப்பவர்.


Senthil Kumar
ஜூலை 26, 2024 22:30

அடுத்த தேர்தல் வரை உள்ளே வைக்க நினைக்கிறார்கள், ஆனால் அதுவே வினை ஆகி விடும். ஒரு தனி மனிதனுக்கு இவ்ளோ பயமா., உச்ச நீதிமன்றம் மட்டுமே ஒரே தீர்வு


RAJA SEKARAN
ஜூலை 28, 2024 09:35

நீங்கள் சொல்வது உண்மைதான் ஒரு தனி மனிதருக்காக இவ்வளவு பயப்பட தேவையில்லை அரசு


RAJA SEKARAN
ஜூலை 28, 2024 09:38

மாநில அரசு திருந்தவே செய்யாது ஆகையால் உச்ச நீதிமன்றத்தில் விடுதலை வாங்கித் தரவும்


Iniyan
ஜூலை 26, 2024 21:48

நாளைக்கு ஓய்வு பெற்றபின் எதாவது விசாரணை கமிஷன் கிடைக்காது என்ற பயம். அல்லது திமுக வீட்டுக்கு ஸ்விக்கி டெலிவரி ஆட்களை அனுப்பும் எண்டு பயம். பேசாமல் இந்த நீதி பதிகள் ராஜினாமா செய்து விட்டு போகலாம்


RAJA SEKARAN
ஜூலை 28, 2024 09:39

நீங்கள் சொல்வது உண்மை


Mani . V
ஜூலை 26, 2024 21:10

நீதிபதிகள் கண்ணை மூடிக்கொண்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாமே? இப்படி ஒவ்வொருவராக விலகிக் கொண்டால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இருக்க ஆசை என்றுதானே பொருள்.


K.n. Dhasarathan
ஜூலை 26, 2024 20:54

நீதிபதிகளே ஏன் வழக்குகளில் இருந்து ஓடுகிறீர்கள் ? ஏன் இந்த பயம் ? நீதி துரையின் செயல்பாடுகள் சரியில்லை .


S Murali
ஜூலை 26, 2024 20:52

மனுதாரர் கருத்துகெல்லாம் எதிர்வினையாற்றுவது தேவையற்றது. அனுகூலமான முடிவு கிடைக்காதவர்கள் எதிர்மறைக் கருத்துகளை பதிவு செய்தால், அதை நீக்கி அதற்காக தண்டக் கட்டணம் பெனால்டி போட்டிருக்க வேண்டும். அந்த கருத்துகளை நீக்க வேண்டிய கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு.


Kannan
ஜூலை 26, 2024 14:42

இந்த நடைமுறை மிகவும் வருந்தத்தக்கது. இம்முறையை பரிசீலித்து நீக்க வேண்டும். அனைத்து நீதிபதிகளும் இப்படி ஏதாவது ஒரு காரணத்தை கூறி வழக்குகளில் இருந்து விலகுதல் நீதியின் மாண்பை கேள்விக்குறி ஆக்கிவிடும்.


Barakat Ali
ஜூலை 26, 2024 16:29

முற்றிலும் நியாயமான கருத்து ....... நானும் இதையே எழுத நினைத்தேன் ......


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை