உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சென்னை - போடி ரயில் வாரத்தில் 6 நாள் இயங்கும்

 சென்னை - போடி ரயில் வாரத்தில் 6 நாள் இயங்கும்

சென்னை: சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனுார் விரைவு ரயிலை வாரத்தில் ஆறு நாட்கள் இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை சென்ட்ரல் -- போடிநாயக்கனுார் இடையே, எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த வண்டி காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படுவதால், பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, இந்த ரயிலை வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்க பயணியர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய ரயில்வே வாரியம், சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனுார் ரயிலை வாரத்தில் ஆறு நாட்களுக்கு இயக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், திருச்சி - காரைக்குடி பயணியர் ரயில், காரைக்குடி - விருதுநகர் பயணியர் ரயில், தற்போது வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு ரயில்களை தினமும் இயக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ