உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்;141பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

நாளை பொதுப்பிரிவு கவுன்சிலிங்;141பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 141 பொறியியல் கல்லூரிகளுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலை. இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகள், ஆவணங்கள் என சரி பார்க்கப்பட்டன. இதில் அண்ணா பல்கலை. விதிகளை 141 கல்லூரிகள் பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, அந்த 141 கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு அண்ணா பல்கலை. நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. குறைபாடுகளை 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பிறகு நேரில் ஆய்வு நடத்திய பிறகு அங்கீகாரம் உறுதி செய்யப்படும். நாளை(ஜூலை 14) பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்குகிறது. இப்படியான ஒரு சூழலில் அண்ணா பல்கலை. நோட்டீஸ் விவகாரம் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கல்லூரியில் சேர்க்கை உறுதியான பின்னர், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது என்பதே அந்த குழப்பம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அந்த 141 கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலை. வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 13, 2025 22:09

அந்த பாலியல் விவகாரத்துக்குப்பிறகும் மாணவர்கள் அந்த பல்கலையில் சேர விரும்புகிறார்களா? மாணவர்கள் சேருவதற்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டனவா?