உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை : பிரியாணி கடை வியாபாரி கைது

சென்னை; சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு கல்லூரி வளாகத்திலேயே பாலியல் தொல்லை நடந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரியாணி கடை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதுபற்றிய விவரம் வருமாறு; நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பெயர் பெற்றது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம். இங்கு பயிலும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இந் நிலையில் நேற்று முன்தினம் (டிச.,23) இரவு காதலர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு அடையாளம் தெரியாத இருவர் வந்துள்ளதாக தெரிகிறது. மாணவரை தாக்கிவிட்டு, மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி., காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று பணியில் இருந்த இரவுநேர காவலாளியிடமும் விசாரணை நடந்தது.இந்நிலையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், நடமாடும் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து பல தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: அவர் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவரது மொபைல்போனில் பல வீடியோக்கள் உள்ளன. 2011 ல் இதேபோன்று அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Naga Subramanian
ஜன 02, 2025 06:32

இந்த சாரைப் பற்றி பேசினால் நமக்குத்தான் கூண்டாஸ் ஆக்ட் பாயும். எனக்கேன் வம்பு. கிடைக்கும் 1000க்கு இவர்களுக்கே ஒட்டு போடுவோம். இதுதான் மக்கள் நிலைப்பாடு.


angbu ganesh
டிச 26, 2024 10:04

இவன் தீயமுக்காவின் எடுபுடின்னு உங்களுக்கு தெரியாத என்ன


என்றும் இந்தியன்
டிச 25, 2024 18:06

2011லிலிருந்து ஒருவன் குற்றவாளி, போலீஸ் அதை சுத்தமாக கண்டு கொள்ளாது. இது தான் திருட்டு திராவிட அடிமை போலீஸ் துறை என்று நிரூபணமாகின்றது. போலீஸ், மக்களின் பாதுகாப்பிற்கா இல்லை திருட்டு திராவிட அரசியல் வியாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் தானா??? யார் யார் முதல்வர் 2011-2024 ஜெயலிலிதா, பன்னீர் செல்வம், பழனிசாமி, ஸ்டாலின். "ஞானசேகரன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பல பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். தனியாக இருந்த காதலர்களை வீடியோ எடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவரது மொபைல்போனில் பல வீடியோக்கள் உள்ளன. 2011 ல் இதேபோன்று அண்ணா பல்கலை மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது".


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை