உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு

நடுவானில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு; லண்டன்- சென்னை விமான சேவை பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது. லண்டன்- சென்னை இடையே விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.லண்டனில் இருந்து 360 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ellef3kl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து விமானி லண்டன் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். புறப்பட்ட 37 நிமிடத்தில் மீண்டும் லண்டனில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் சென்னை வராமல் மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்றது. தற்போது, லண்டன், சென்னை இடையே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rathna
ஜூன் 16, 2025 18:16

நிறுவனங்களின் சிக்கன நடவடிக்கைகளால் அப்பாவிகளின் உயிர் பாதிக்கப்படுகிறது.


Mohan
ஜூன் 16, 2025 15:11

இதுநாள்வரை முறைப்படி விமானத்தை பராமரிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது..


Ramesh Sargam
ஜூன் 16, 2025 12:07

மக்கள் கொஞ்ச நாட்களுக்கு விமானத்தில் பயணிப்பதை தவிர்க்கவேண்டும்.


Anantharaman Srinivasan
ஜூன் 16, 2025 11:47

ஏன் இப்படி? சமீப காலமாக விமானத்தில் ஏறி பறந்து இறங்கும் வரை உயிர் நம் கையில்லை. எனவே விமானபயணம் மேற்கொள்வோர் தங்கள் ஜாதக நடப்பையும், சகுனம் பார்த்து பயணிப்பது நல்லது.


mohan
ஜூன் 16, 2025 11:22

விமானங்களை பொறுத்த வரை preventive maintenance முக்கியம். எனக்கு தெரிந்து மொபைல் போன் வந்த பின் எல்லா துறைகளும் அலட்சியம் அதிகமாகி விட்டது.. யாருக்கும் வேளையில் கவனம் இல்லை.


Narayanan
ஜூன் 16, 2025 10:44

மொத்தத்தில் மனித வாழ்க்கை உலகம் முழுவதும் கடினமாகவே இருக்கிறது . விமானத்தில் பறப்பது நிச்சயம் இல்லாத வாழ்க்கை ஆகிவிட்டது .


Ganapathy
ஜூன் 16, 2025 10:06

ஏர்பஸ் 380 அல்லது 350 இவை இரண்டும்தான் அதிக அளவில் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாத் நிறுவனங்களின் பயன்பாட்டில் உள்ளன. விபத்துக்களும் இல்லை.


Manaimaran
ஜூன் 16, 2025 09:26

அவதிய விட உயிர் முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை