உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ்சில் ரீல்ஸ் வீடியோ; டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!

அரசு பஸ்சில் ரீல்ஸ் வீடியோ; டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பணியின் போது அரசு பஸ் ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.இளைய தலைமுறை மத்தியில் ரீல்ஸ் மோகத்துக்கு பஞ்சமில்லை. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அதை வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிடுவதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=03dcmcyy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சில நேரங்களில் விளையாட்டாக எடுக்கப்படும் ரீல்ஸ் வீடியோக்கள் வினையில் முடிவது உண்டு. அப்படித்தான் சென்னையில் பணியின் போது பஸ்சை ஓட்டியபடி ரீல்ஸ் எடுத்து வீடியோ ரிலீஸ் செய்த டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை வடபழநியில் மாநகர பஸ்சை அதன் டிரைவர் இயக்கிய படி சென்றுள்ளார். அவரின் அருகில் கையில் செல்போனுடன் வந்த கண்டக்டர், அந்த காட்சியை ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். அதோடு நிற்காமல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.இந்த ரீல்ஸ் வீடியோ வைரலானதோடு பணியில் இருக்கும் போது டிரைவர், கண்டக்டர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற விதி என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது. இந்த வீடியோ போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது. அவர்கள் நடத்திய விசாரணையில் பணியின் போது செல்போன் இயக்கி ரீல்ஸ் எடுத்தது தெரிய வந்தது.வீடியோ விவகாரம் வைரல் ஆனதை அடுத்து, அந்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் இருவரும் பணிநீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களான இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
பிப் 04, 2025 20:52

அன்றைக்கு அந்த காக்கி சட்டைகள் மெரினா கடற்கரையில் mobile used for uploading video இன்றைக்கு இந்த காக்கி சட்டைகள் mobile used.. Made In Indians


SUBRAMANIAN P
பிப் 04, 2025 13:33

நான் கூட முதல்ல ஷாக் ஆயிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது.. தற்காலிக ஒப்பந்த பணியாளர்களா? அதானே பார்த்தேன்.. நிரந்தர பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் இந்த திராவிட மாடல் ஆட்சியாளர்களால் எடுக்க முடியாது.. அப்புறம் கலவரம் வெடிக்கும்.. பஸ் தீப்பிடித்து எரியும்.. தமிழ்நாடே ரணகளமாகும்.. அப்புறம் திமுகவுக்கு ஓட்டு போகும்.. ஆனா அந்த மாதிரி நடவடிக்கையெல்லாம் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.


கல்யாணராமன்
பிப் 04, 2025 12:06

ஒப்பந்த பணியாளார்களா? அதான் டிஸ்மிஸ் செய்து புரட்சி செய்து விட்டீர்கள். செய்தியை படிக்க ஆரம்பித்தவுடன் நிரந்தர ஊழியர்கள் மேல் நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்று ஆச்சர்யமாக இருந்தது. கடைசியில் தற்காலிக ஊழியர்கள்.


Barakat Ali
பிப் 04, 2025 12:03

பணியின்போது செய்திருக்கக் கூடாது .... இவர்கள் ஒரு வாரம் சாலையின் ஓரம் நின்று மக்களிடம் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றச்சொல்லி பிரச்சாரம் செய்யவேண்டும் .... இதுபோன்ற தண்டனைகள் போதுமானவை .....


Haribabu Poornachari
பிப் 04, 2025 14:07

இதில் டிரைவர் போன் பயன் படுத்தவில்லை. எதற்க்காக டிரைவர் டிஸ்மிஸ் ?


Rajathi Rajan
பிப் 04, 2025 11:32

இப்படி தான் புத்தி இல்லாம ஏதாவது பண்ணிக்கிட்டு திரியும்.....


மோகன்ராஜ்
பிப் 04, 2025 11:21

இது கற்பழிப்பு போன்ற விஷயம் அல்ல அதைவிட கொடியது போல யார் அந்த சார் அதை கண்டுபிடிங்கடா முதல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை