உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருகிறது போகி பண்டிகை! பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அட்வைஸ்

வருகிறது போகி பண்டிகை! பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அட்வைஸ்

சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; போகி பண்டிகையை முன்னிட்டு பயன்பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் மற்றும் ரப்பர் டியூப்கள் போன்றவற்றை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மக்களுக்கும் உடல்நலம் பாதிக்​கப்படுகிறது.எனவே, மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் பிளாஸ்டிக், டயர்கள், பழைய துணிகள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவற்றை தனியாக சேகரித்து, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !