உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்க்கு தெரியுமா தேங்காய் ருசி; நாட்டுக்கு சொல்லுது சென்னை மாநகராட்சி; எல்லாம் கார் பந்தயம் செய்யும் மாயம்!

நாய்க்கு தெரியுமா தேங்காய் ருசி; நாட்டுக்கு சொல்லுது சென்னை மாநகராட்சி; எல்லாம் கார் பந்தயம் செய்யும் மாயம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் நடக்கும் பார்முலா கார் பந்தயத்தின் அருமை பெருமைகளை அறியாமல், குறுக்கே சுற்றித்திரியும் தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் வலை வீசி பிடித்து வருகின்றனர்.பெரும் எதிர்பார்ப்பு மற்றும் கடும் விமர்னசங்களுக்கு இடையில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடங்கி உள்ளது. 2ம் நாளாக இன்றும் நடக்கிறது. நேற்றிரவு பந்தயத்தின் போது சாலையின் குறுக்கே நாய் புகுந்து இடையூறு ஏற்படுத்தியது. அந்த நாயை பிடித்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பின்னர் அதனை அப்புறத்தினர்.இந்நிலையில் இன்றைய போட்டியின் போது மீண்டும் நாய்கள் தொல்லை செய்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. இதையடுத்து கார் பந்தயம் நடக்கும் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை மாநகராட்சி அதிகாரிகள் பிடிக்க உத்தரவிட்டுள்ளனர். வேறு வழியில்லாத மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி ஆங்காங்கே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து வருகின்றனர்.இவ்வாறு பிடிக்கப்படும் தெருநாய்கள் அனைத்து போட்டிகளும் முடிந்த பின்னர், அதே இடத்தில் மீண்டும் கொண்டு வந்து விடப்படும் என்று தெரிகிறது. சென்னையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை வீதியில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடிக்கின்றன. கடிபட்ட மக்கள் மருத்துவமனைக்கு அலைவது அன்றாடம் நடக்கிறது. அப்போதெல்லாம் அவசர நடவடிக்கை எதுவும் எடுக்காத மாநகராட்சி, இப்போது கார் பந்தயத்துக்கு இடையூறு என்றதும், ஓடியாடி நாய் பிடிக்கிறது. மக்களை காட்டிலும் கார் பந்தயம் தான் முக்கியம் என்று இதன் மூலம் நாட்டுக்கு மக்களுக்கு சிறப்பான செய்தியை சென்னை பெருநகர மாநகராட்சி சொல்கிறது என்று வருத்தப்படுகின்றனர், அப்பாவி மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

kulandai kannan
செப் 01, 2024 18:19

அந்த நாய்களுக்கும் கார்களுக்கும் வேகப் பந்தயம் நடத்தினால் பொருத்தமாக இருக்கும்.


Dharmavaan
செப் 01, 2024 18:06

பொது மக்கள் /சமுதாயம் வருத்தம் அறியாத பொறுப்பற்ற நீதித்துறை


ஆரூர் ரங்
செப் 01, 2024 17:26

எங்க ஏரியா உள்ளே வராதே ன்னு நாய்ங்க விரட்டுது.ஏரோட்டும் மக்கள் ஏங்கி தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உனக்கு தியாகேசா" எனக் கேட்டவர் கருணாநிதி, வாரிசோ நாயகியின் ஆசைக்காக ....


D.Ambujavalli
செப் 01, 2024 16:52

கார் ரேஸ் நடத்தி 'பெத்த' பெருமையுடன் வளர்வதில் வயிற்றெரிச்சல் இருக்கும் போல


T.sthivinayagam
செப் 01, 2024 16:06

இடையுறும் செய்யும் ருசி தெரியாத நாய்களை வலை வைத்து பிடித்து அடையுங்கள் நாய்கள் குலைப்பு குறையும் பந்தயம் நன்றே நடக்கும் என மக்கள் கூறுகின்றனர்


Muthukumar
செப் 01, 2024 15:45

இந்த கார் பந்தயம் அண்ணியாருக்காக...ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்களே நல்லா அனுபவியுங்கள்...


ஸ்ரீ
செப் 01, 2024 14:23

6 அறிவு நாய்களின் செயல் அப்படித்தானே இருக்கும்.......


அப்புசாமி
செப் 01, 2024 14:15

நாய்க்கு வேண்டியது எலும்புத் துண்டுகளும், கொஞ்சம் பிரியாணியும் தான். தேங்காய் தேவையில்லை. அதனால்நச்ய் ஒன்றும் குறைந்து விடாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.


pv, முத்தூர்
செப் 01, 2024 13:17

மக்கள் கடிபடும்போது பிடிக்கப்படாத நாய்கள், கார்பந்தயத்திர்காக பிடிக்கப்படுகிறது. வாழ்க சென்னை மாநகராட்சி, இளவரசர் ஆட்சி.


T.sthivinayagam
செப் 01, 2024 13:15

தேசவிரோத சக்திகளின் சதிகளையும் மீறி சீறி பாயும் பந்தைய கார்கள்


Duruvesan
செப் 01, 2024 14:08

சொந்த பெயர் இல்லாமல் ஹிந்து பெயரில் திரியும் மார்க்கத்தின் முட்டு சூப்பர்,


Kumar Kumzi
செப் 01, 2024 14:55

என்னங்கடா இது பங்களாதேஷ் பயங்கரவாதிக்கு பேரு பம்முது ஹீஹீஹீ


புதிய வீடியோ