உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?

தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தர்பூசணி பழங்களின் விற்பனை களை கட்டி உள்ளது. வெயில் கடுமை காரணமாக, பலரும் தர்பூசணியை வாங்கி சென்று சாப்பிட ஆரம்பித்தனர். வியாபாரமும் களைகட்டியதாக வணிகர்கள் தெரிவித்து இருந்தனர். அதேநேரத்தில் தர்பூசணி விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் அகற்றியதாக கூறினர். ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணி, நிறமேற்றி விற்பனைக்கு வைக்கப்பட்ட தர்பூசணி என மத்தியில் தகவல்கள் பரவியதால் அதை வாங்க மக்கள் தயக்கம் காட்டினர். வியாபாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பும் எழுந்தது. பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் விளக்கம் அளித்திருந்தார். அதேசமயம் சென்னையில் பிரபலமான பிலால் ஹோட்டலில் ஆய்வு செய்ய அரசு வாகனத்தில் சென்றிருக்கிறார். ஹோட்டல் வாசலுக்குச் சென்ற அவர், பின்னர் சோதனை நடத்தாமல் சென்றுவிட்டார். இந் நிலையில், அதிகாரி சதீஷ்குமார் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மருந்து நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ், கூடுதலாக சென்னை மாவட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Bhaskaran
ஏப் 05, 2025 16:53

பிலால் ஹோட்டல் மீது கைவைத்தால் கட்சி தலைமை சும்மா விடுவார்கலா அய்யர் ஹோட்டல் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் கேள்வி கேட்பார் கிடையாது


Natarajan Ramanathan
ஏப் 05, 2025 16:39

அவர் திடீரென்று சைவம் ஆகிவிட்டதால் மர்ம கும்பலின் நாய் பூனை பிரியாணியை சோதனை செய்ய முடியாமல் போய்விட்டது.


g.kumaresan
ஏப் 05, 2025 16:17

பழத்தில் ஊசி போட முடியாது .எதனை பழத்திற்கு ஊசி போட முடியும் .விவசாயம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரு லாரியில் சுமார் 1500-2000 தர்ப்பூசணி வரும் இதனை மொத்தம் ஊசி போடுவது சாத்தியமா? விவசாயம் செய்யும் ஆட்கள் தமிழ்நாட்டில் குறைத்து கொண்டே வருகிறார்கள். நாளை நம் உணவில் நாமே மண் போடுவது போல புரளியை கிளப்பாதீர்கள்.


Mecca Shivan
ஏப் 05, 2025 18:53

அரைகுறையாக படித்தால் இந்த மாதிரிதான் யோசிக்கத்தோணும் .. விவசாயிகள் என்றால் யோக்கியமானவர்கள் என்று அர்த்தமில்லை .. இப்போது தர்பூசணி, அடுத்து கல் போட்டு பழுக்க வைத்த மாம்பழம் , சாயம் தோய்த்த பட்டாணி மற்றும் கீரை வகைகள் என்று பல கேடுகள் உள்ளன .. பண்ணை கோழிகளுக்கு ஸ்டெராய்டு ஊசி போடுவது மட்டும் பொய்யா ? இப்படி உம்மை போல ஒரு கும்பல் கார்பொரேட் கார்பொரேட் என்று கதறுவது போல நடிப்பதும் தின கூத்தாகிவிட்டது.


Rasheel
ஏப் 05, 2025 16:07

ஒரு பிரியாணி வாழ்க்கையில் விளையாடி விட்டது. அது அதல பாதாளம் வரை பாயும்.


r ravichandran
ஏப் 05, 2025 14:06

பிலால் உணவகத்துக்கு சோதனை செய்ய சென்றால் சும்மா விட்டு விடுவார்களா என்ன?


Sivagiri
ஏப் 05, 2025 13:58

தர்பூசணியில் மட்டும் அல்ல - - - முக்கியமாக பப்பாளியிலும் , ஊசி போடப்படுகிறது .. . . கேட்டால் , ரெட்லேடி வகை பப்பாளி - என்று , புதிதாக கதை விடுகிறார்கள் . . . கொய்யாவில் , சிகப்பு கலர் மற்றும் சாக்கரின் கலந்து ஊசி போட்டு விடறாங்க . . மாம்பழங்களிலும் ஊசி போட படுகிறது . . . இந்த மாதிரி ஊசி போடப் பட்ட பழங்கள் எல்லாமே ஒரே மாதிரி வெள்ளை சர்க்கரை - இனிப்பு சுவையில் இருக்கும் . . . ஆனால் சாக்கரின் கலர் கரைசல் . . . இனி , அரசால் , அதிகாரிகளால் , இந்த மாதிரி , வியாபார மோசடிகளை தடுக்க ஒன்றும் செய்ய முடியாது . . .


vee srikanth
ஏப் 06, 2025 02:30

ஆக , தேங்காய்க்குள் வெடிகுண்டு என்று கவுண்டமணி சொன்னால் போலே


Varadarajan Nagarajan
ஏப் 05, 2025 13:49

போராட்டம் நடத்திய விவசாயியயே முதன் முதலாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையிலடைத்த மாடல் அரசு இந்த இடமாறுதலை விவசாயிகளுக்காக செய்திருக்க வாய்பே இல்லை ராசா. சிறுபான்மையின காவலனாக இருக்கும் அரசு அந்த சமூகத்தினர் நடத்தும் உணவகத்தில் இந்த அதிகாரி ஆய்வு மேற்கொள்ளபோகிறார் என்று வந்த செய்திக்காகத்தான் இந்த பணியிட மாற்றம் என மக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.


sridhar
ஏப் 05, 2025 13:48

ஏதோ ஹிந்து நடத்தும் ஹோட்டலுக்கு போனோமா , சாம்பார் ஊசி போச்சு என்று சொன்னோமா என்று இல்லாமல் இவரை யார் பிலால் ஹோட்டலுக்கு போய் சீன் போட சொன்னது


Perumal Pillai
ஏப் 05, 2025 13:47

இந்த ஆளு ஒரு fraud நடிப்பு சக்கரவர்த்தி .


Mecca Shivan
ஏப் 05, 2025 20:20

யாரு சைமனா ? தெரியுமே 420 thirudar


மணி
ஏப் 05, 2025 13:29

திருடன் அப்பப்ப வருவானுக


முக்கிய வீடியோ