உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் மாளிகை, இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கவர்னர் மாளிகை, இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் மாளிகை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மை காலமாக விமானங்கள், பள்ளிகள் மற்றும் ரயில்நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும், அதன்பிறகு அது புரளி என்று சோதனையில் தெரிய வருகிறது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pmsamy
செப் 18, 2025 08:30

டிவி சீரியல் ட்ராமா மாதிரி இருக்கு இந்த செய்தி வேற வேலை இல்லையா உங்களுக்கு


ManiMurugan Murugan
செப் 17, 2025 23:17

இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்று அறிய முடியாதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை