இன்று சென்னை - மதுரை முன்பதிவில்லா மெமு ரயில்
மதுரை:தீபாவளியை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க, மதுரையில் இருந்து சென்னைக்கு முதன் முறையாக, 12 பெட்டிகள் உடைய முன்பதிவில்லா, 'மெமு' (மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.இன்று காலை, 10:15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மெமு சிறப்பு ரயில் மாலை 6:30 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் நாளை அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்லும்.இவ்விரு ரயில்களும், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தானில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான 2ம் வகுப்பு முன்பதிவில்லா பயணக் கட்டணம் வசூலிக்கப்படும்.