உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி சிங்கார சென்னை தான்! ஏப்ரல் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது

இனி சிங்கார சென்னை தான்! ஏப்ரல் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது

சென்னை; சென்னையில் வரும் ஏப்ரல் மாதம் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக சிங்கார சென்னை கார்டு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில் மக்கள் நெருக்கம் பற்றி அறியாதவர்கள் வெகு குறைவு. காலை மற்றும் மாலை வேளைகளில் மக்கள் நடமாட்டம் அதீதம். மக்கள் கூட்டம் ஒருபுறம் என்றாலும், மறுபக்கம் வாகன நெருக்கமும் மிக அதிகம். மக்கள் தொகை, வாகன நெருக்கடிகளுக்கு மத்தியில் பயணிகளின் போக்குவரத்து என்பது அவ்வளவு லேசானது அல்ல. அவர்களின் போக்குவரத்துக்கு பெரும் பங்காற்றியது சென்னை மெட்ரோ ரயில்கள் தான். இதில் தினமும் பயணிப்பவர்களுக்காக மெட்ரோ ரயில் கார்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. வரிசையில் நிற்பதை தவிர்க்க பயணிகள் அதிகம் பேர் இந்த கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் வரும் ஏப்ரல் முதல் இந்த மெட்ரோ கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக, புதியதாக சிங்கார சென்னை கார்டு புழக்கத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இது நடைமுறையில் இருந்தாலும் ஏப்ரல் முதல் மெட்ரோ ரயில் கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ கார்டுகள் ஏப்ரலுக்கு பிறகு செல்லாது என்பதால் அதில் உள்ள பாக்கித் தொகை முழுவதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு பதிலாக சிங்கார சென்னை கார்டை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சிங்கார சென்னை கார்டை கொண்டு ரயிலில் மட்டும் அல்லாது மாநகர பஸ்கள், புறநகர் ரயில்களில் பயணம் செல்லலாம். ஷாப்பிங், ஹோட்டல் பில்களையும் இந்த சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி செலுத்தலாம். சிங்கார சென்னை கார்டில் ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகையானது, குளோபல் பேலன்ஸ், ரீடெயில் பேலன்ஸ் என இரு வகைகளாக பிரிக்கப்படும். அதில் குளோபல் பேலன்சை பயணம் செய்யவும், ரீடெயில் பேலன்சை ஷாப்பிங் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். ரயில் நிலைய முன்பதிவு கவுன்ட்டர்களில் இந்த கார்டு இலவசமாக கிடைக்கிறது. பழைய கார்டை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைத்து, அந்த கார்டின் வைப்புத் தொகை ரூ.50ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கோமாளி
ஜன 19, 2025 19:41

அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல MTCல போன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை கொண்டு வாங்க.


தமிழ்வேள்
ஜன 19, 2025 20:49

விளங்காது.. கண்டக்டர்கள் வசமுள்ள ஒரே டிக்கெட் மெஷின் பயன்படுத்தி ரொக்கம் கார்டு இரண்டு மூலமாகவும் டிக்கெட் வழங்கும் போது பயணம் மிகவும் தாமதமாக இருக்கும்..கார்டு டிக்கெட்டுகள் தனி கவுண்டர்கள் மூலம் வழங்கப்படும் முறையே நல்லது..


Venkataraman
ஜன 19, 2025 19:38

நல்ல திட்டம்தான். ஆனால் இதேபோல நாடு முழுவதுமாக ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கலாம் என்றால் ஏன் கூடாது என்கிறார்கள் ? இதற்கு முன்பு 1965 வரை நாடு முழுவதுமாக ஒரே சமயத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டது.


nagendhiran
ஜன 19, 2025 18:43

தமிழ் மொழியை எங்கே... காணோம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை